For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா கொரோனா.. நாங்க விளையாடலாமா.. சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா.. காத்திருக்கும் வீரர்கள்

மும்பை: ஐபிஎல் தொடரின் தலையெழுத்தை அறிவதற்காக ஆஸ்திரேலியா வீரர்கள் காத்துள்ளனராம்.

2020 ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ம் தேதி போட்டி தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்கள்

காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்கள்

இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடக் காத்துள்ள 17 ஆஸ்திரேலியா வீர்ரகள், தொடர் நடைபெறுமா என்பது குறித்து அறிய ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன் கூறுகையில், நானும் பிற ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரின் நிலை குறித்து அறிய காத்துள்ளோம் என்றார்.

ஐபிஎல் தொடர் நடக்குமா ரத்தாகுமா

ஐபிஎல் தொடர் நடக்குமா ரத்தாகுமா

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதை அறிய காத்துள்ளோம். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்திருப்பதாக வெளியான செய்தி தவறு. சாதாரண தொண்டை அழற்சிதான் இருந்தது. சந்தேகத்தின் பேரில்தான் னிமைப்படுத்தப்பட்டிருந்தேன். தற்போது குணமாகி விட்டேன் என்றார் ரிச்சர்ட்சன்.

நடக்குமா நடக்காதா ரத்தாகுமா?

நடக்குமா நடக்காதா ரத்தாகுமா?

ரிச்சர்ட்சன் தொடர்ந்து கூறுகையில், ஐபிஎல் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின்றன. ரத்து செய்யப்பட்டதாக ஒரு தகவலும், இல்லை தள்ளிப் போடப்பட்டுள்ளதாக இன்னொரு தகவலும் வருகிறது. இதனால் போனுக்கு அருகிலேயே உட்கார நேரிட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எந்தத் தகவல் வேண்டுமானாலும் வரலாம் என்று காத்திருக்கிறோம். தற்போதைய நிலையில் ஏப்ரல் 15ம் தேதி தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாடக் காத்திருக்கிறோம் என்றார்.

இது நல்ல ஓய்வு

இது நல்ல ஓய்வு

தற்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வேலையில்லை. இங்கும் போட்டிகள் ரத்தாகி விட்டன. எனவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு அரட்டை அடித்து வருகிறோம். இதற்கு முன்பு இப்படி ஒரு ஓய்வு கிடைத்ததில்லை. ஐபிஎல் போட்டிகள் வரை அனைவருக்கும் வேலை இருக்கும். எனவே அதற்கு முன்பாக இது நல்ல ஓய்வாக கிடைத்துள்ளது. வீட்டில் ஓய்வாக இருப்பதே ஜாலியானதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது

உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது

சமீபத்தில்தான் தென்னாப்பிரிக்கா போயிருந்தோம். அப்போது கூட கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. ஆனால் இன்று நிலைமையே மாறி விட்டது. அனைத்துமே ரத்தாகி வருகின்றன. உலகமே ஸ்தம்பித்தது போல உள்ளது உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ரிச்சர்ட்சன்.

Story first published: Tuesday, March 17, 2020, 20:13 [IST]
Other articles published on Mar 17, 2020
English summary
17 Australia players are waiting to know the fate of IPL 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X