For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறும் 60 ரன்தானா... பப்பி ஷேமா இருக்கு.. பொறுமித் தள்ளும் ஆஸ்திரேலியர்கள்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 60 ரன்களில் சுருண்டு போனது ஆஸ்திரேலிய ரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் போட்டு ஆஸ்திரேலிய அணியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இங்கிலாந்திடம் போய் இவ்வளவு கேவலமான ஸ்கோரை எடுத்ததுதான் ஆஸ்திரேலியர்களை உசுப்பேற்றி விட்டது. சமீப ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பேட்டிங் தோல்வியாக இது பார்க்கப்படுகிரது.

கிளார்க்கை விரட்டி விடுங்க முதலில்

கிளார்க்கை விரட்டி விடுங்க முதலில்

ஆஸ்திரேலியாவின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு காரணம் கேப்டன் மைக்கேல் கிளார்க்தான். அவரை முதலில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

111 பந்துகள்தான் பாஸ்

111 பந்துகள்தான் பாஸ்

வெறும் 111 பந்துகளிலேயே ஆஸ்திரேலியா சுருண்டு போனதுதான் ஆஸ்திரேலிய ரசிகர்களை கடுப்படைய வைத்துள்ளது. இப்படியா விளையாடுவார்கள் என்றும் ரசிகர்களும், மீடியாக்களும் குமுறுகின்றன.

கோப்பை நமக்கு இல்லை

கோப்பை நமக்கு இல்லை

நமக்கு நிச்சயம் இந்த முறை ஆஷஸ் கோப்பை இல்லை என்ற அவநம்பிக்கையில் வீரர்களும் உள்ளனர், ஆஸ்திரேலிய ரசிகர்களும் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணி 214 ரன்கள் முன்னிலை எடுத்துள்ளது. போட்டியில் இன்று 2வது நாள்தான் நடக்கிறது. எனவே ஆஸ்திரேலியா மிகப் பெரிய கேவலமான தோல்வியை இந்த போட்டியில் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

பொளந்து கட்டிய பிராட்

பொளந்து கட்டிய பிராட்

இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் புயலாக மாறி ஆஸ்திரேலிய பேட்டிங்கை நையப்புடைத்து விட்டார். அதன் பின்னர் பேட்டிங்கில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் போட்டு 124 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

14 ரன் கூட எடுக்க முடியலையா

14 ரன் கூட எடுக்க முடியலையா

பலரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தங்களது அணிக்குக் கிடைத்த எக்ஸ்ட்ரா ரன்களை விட குறைந்த ஸ்கோரை எடுத்ததைத்தான் விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் யாருமே 10 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

ஒரு டிவிட்டுக்குள் அடங்கிய ஆஸி. ஸ்கோர்

ஒரு டிவிட்டுக்குள் அடங்கிய ஆஸி. ஸ்கோர்

ஒரு ஆஸ்திரேலிய நாளிதழ் கூறுகையில் ஒரு சிங்கிள் டிவிட்டில் இடம் பெறும் 140 கேரக்டர்களுக்குள் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை அடக்கி விடலாம் என கிண்டலடித்துள்ளது.

கிளார்க் விலகக் கோரிக்கை

கிளார்க் விலகக் கோரிக்கை

ஹெரால்ட் இதழின் கட்டுரையாசிரியர் பீட்டர் பிட்ஸ்மோன்ஸ் கூறுகையில், மைக்கேல் கிளார்க் உடனடியாக விலகி விட வேண்டும். இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றார்.

மொத்தத்தில் ஆஸ்திரேலியாவை அத்தனை பேரும் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்....!

Story first published: Friday, August 7, 2015, 12:44 [IST]
Other articles published on Aug 7, 2015
English summary
The fans and media in Australia are slamming their cricket team which is facing a great humiliation in England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X