For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. வெற்றி.. 400 விக்கெட்டுகளை கடந்த லயான்..!!

பிரிஸ்பேன்: பாரம்பரியமிக்க முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் தொடங்கியது.

Recommended Video

Nathan Lyon takes 400th Test wicket | Ashes Brisbane Test | AUS vs ENG | OneIndia Tamil

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாட தொடங்கியது.

டிராவிஸ் ஹேட்

டிராவிஸ் ஹேட்

வார்னர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய லாபஸ்சேங் 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார்., டிராவிஸ் ஹேட் அதிரடியாக விளையாடி 85 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹேட் 152 ரன்கள் சேர்த்தார், இதனால் ஆஸ்திரேலிய அணி 425 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

தொடக்க வீரர் ஹசிப் ஹமீது 27 ரன்களும்,ரோரி பெர்ன்ஸ் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 61 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இருப்பினும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் மாலனும், கேப்டன் ஜோ ரூட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்து விளையாடினர். இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. டேவிட் மாலன் 82 ரன்களுடனும், ஜோ ரூட் 89 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றது.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 14 ரன்களிலும், போப் 4 ரன்களிலும் வெளியேற, இங்கிலாந்து

வீரர் ஜாஸ் பட்லர் கடுமையாக போராடி 23 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக கிறிஸ் வொக்ஸ் 16 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணியை விட இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால் அது போதுமானதாக இல்லை. இதனால் இங்கிலாந்து அணி297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வெற்றி

வெற்றி

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 400 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார். இதனையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் களயமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கி அலெக்ஸ் கேரி 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி5.1வது ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹேட்க்கு வழங்கப்பட்டது

Story first published: Saturday, December 11, 2021, 12:57 [IST]
Other articles published on Dec 11, 2021
English summary
The first Ashes Test match between England and Australia was a feast for the fans as England won the toss and elected to bat first and were bowled out for 147 in the first innings. Australia were bowled out for 425. England were bowled out for 297 in their second innings with 278 runs to spare. Following this, Australia easily reached the target of 20 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X