முதல் போட்டியிலேயே ‘பக் பக்’ விஷயங்கள்.. தென்னாப்பிரிக்காவிடம் கதிகலங்கிய ஆஸி,.. கடைசி நேர ட்விஸ்ட்

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்கின. இதன் முதல் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்கம்

தொடக்கம்

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்துக்கொண்டே இருந்தது. தொடக்க வீரரான கேப்டன் பவுமா 12 ரன்களுக்கும், டிகாக் 7 ரன்களுக்கு அவுட்டாகினர். இதன்பின்னர் வந்த வான் டர் டுசேன் (2), க்ளாசன் (13) ஆகியோர் ஏமாற்ற அந்த அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

இதன் பின்னர் வந்த மார்க்ரம் அணியை சரிவில் இருந்து மீட்டார். 36 பந்துகளை சந்தித்த அவர் 40 ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மிடில் ஆர்டர் மொத்தமாக சரிய 20 ஓவர்களில் தென்ன்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் தான் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டார்க், ஹாசல்வுட், சாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

திணறிய ஆஸ்திரேலியா

திணறிய ஆஸ்திரேலியா

குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ரன்களை குவிக்க திணறியது. வார்னர் 14 ரன்களுக்கும், கேப்டன் ஃபின்ச் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித 35 ரன்கள், மேக்ஸ்வெல் 18 என சீரான இடைவெளியில் விக்கெட் விழ, ரன்களை சேர்த்தனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. அதாவது கடைசி 2 ஓவர்களில் (12 பந்துகளில்) 18 ரன்கள் தேவைப்பட்டது.

விறுவிறுப்பு கட்டம்

விறுவிறுப்பு கட்டம்

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தென்னாப்பிரிக்க அணி பவுலர் நார்ட்ஜே 19 ஓவரின் முதல் 4 பந்துகளில் சிங்கிள்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சரியாக வீசினார். ஆனால் 5வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்ந்தது. இதனால் கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் என்ற நிலை உருவானது.கடைசி ஓவரை ப்ரீடோரியஸ் என்ற வீரர் வீச 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசி மார்கஸ் ஸ்டோய்னிஸ் அசத்தினார். இதனால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அசத்தியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia beat South africa by 5 wickets in the first match of t20 worldcup
Story first published: Saturday, October 23, 2021, 20:06 [IST]
Other articles published on Oct 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X