For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. வீரர்களை கண்ணீர் சிந்த வைத்த இலங்கை ரசிகர்கள்.. வெறும் 160 ரன்களில் சுருண்ட ஸ்ரீலங்கா

கொழும்பு: இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்றது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், சம்பிரதாய ஆட்டமாக நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்

இலங்கை 85/8

இலங்கை 85/8

தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள், கட்டுக்கோப்பாக பந்துவீசி, இலங்கைக்கு நெருக்கடி அளித்தனர். குணதிலகா 8 ரன்களிலும், நிசாங்கா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 26 ரன்கள் எடுத்திருந்த போது மெக்ஸ்வேல் பந்துவீச்சில் வெளியேறினார். தினேஷ் சந்திமால் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

கருணரத்னே அபாரம்

கருணரத்னே அபாரம்

இலங்கை அணி 85 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் கருணரத்னே நிதானமாக விளையாடி அணியை கௌரவமான இலக்கை அடைய உதவி செய்தார். கருணரத்னே தனி ஆளாக நின்று 75 ரன்கள் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 160 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸி நிதானம்

ஆஸி நிதானம்

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்ச் மீண்டும் டக் அவுட்டாகி வெளியேறினார். டேவிட் வார்னர் 10 ரன்களை மட்டுமே சேர்க்க, மிட்செல் மார்ஷ் 24 ரன்களிலும், இங்கிலிஸ் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

இலங்கை ரசிகர்களின் மரியாதை

இலங்கை ரசிகர்களின் மரியாதை

ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மார்னஸ் லாபஸ்சேங் பொறுமையாக விளையாடி 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் அலெக்ஸ் கேரி 45 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 39.3வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. தங்களது சொந்த அணி தோற்ற போதும், இலங்கை ரசிகர்கள் தேங்க் யூ ஆஸ்திரேலியா என்று முழக்கமிட, ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆனந்த கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்து மரியாதையை ஏற்று கொண்டனர்.

Story first published: Saturday, June 25, 2022, 18:08 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
Australia beat srilanka in 5th odi – Aussies takes a victory lap ஆஸி. வீரர்களை கண்ணீர் சிந்த வைத்த இலங்கை ரசிகர்கள்.. வெறும் 160 ரன்களில் சுருண்ட ஸ்ரீலங்கா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X