For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. அணிக்குள் பிளவு.. டெஸ்ட் தொடரை திடீரென ரத்து செய்தது ஏன்?.. காரணம் இந்தியா.. பரபர பின்னணி!

சிட்னி: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு இருந்த டெஸ்ட் தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த விரக்தியில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

மிரண்டு போய் பார்த்த கோலி.. வேறு யாருமே வேண்டாம்.. இந்த தமிழக வீரர் போதும்..டிக் அடித்த இந்திய டீம் மிரண்டு போய் பார்த்த கோலி.. வேறு யாருமே வேண்டாம்.. இந்த தமிழக வீரர் போதும்..டிக் அடித்த இந்திய டீம்

அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரே நேரத்தில் வேறு வேறு நாடுகளில் இரண்டு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டு, இரண்டு பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருப்பார். டி 20 அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக் டொனால்ட் நியூசிலாந்துக்கு செல்வார். இந்த நிலையில்தான் தற்போது திடீரென டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.

நழுவியது

நழுவியது

கொரோனாவை காரணம் காட்டி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய அணி கைவிட்டுள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு வேறு காரணம் உள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குள் ஏற்பட்ட பிளவுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

கோபம்

கோபம்

இந்திய டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடும் விரக்தியில் உள்ளனர் . ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மீதும், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மீதும் வீரர்கள் கோபத்தில் உள்ளனர் . பயிற்சியாளருக்கு எதிராக சில வீரர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு எதிராக இவர்கள் அணி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயங்கள் அனைத்தும் ஆஸி ஊடகங்களில் வெளியானது. அணிக்குள் இப்படி பிளவு ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது என்று நேற்று ஜஸ்டின் லாங்கர் பேட்டி அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 பேட்டி

பேட்டி

இந்த நிலையில்தான் தற்போது டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஒத்தி வைத்து உள்ளது. பயிற்சியாளர் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இப்படி டெஸ்ட் தொடரை ஒத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதனால ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் .

Story first published: Wednesday, February 3, 2021, 10:38 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
Australia canceled the SA test tour maybe because of the rift inside the team after India tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X