For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்? பின்னணி

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரே நேரத்தில் வேறு வேறு நாடுகளில் இரண்டு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியை இது பெரிய அளவில் பாதித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதனால் தங்கள் நாட்டு வீரர்கள் மீது கோபத்தில் உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரே நேரத்தில் வேறு வேறு நாடுகளில் இரண்டு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணி இதற்காக இரண்டு அணிகளை தயார் செய்துள்ளது.

இரண்டு தொடர்

இரண்டு தொடர்

அதன்படி ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது. ஒரே நேரத்தில் இந்த தொடர் இரண்டும் நடக்க உள்ளது.

ஏன் ?

ஏன் ?

முதலில் நியூசிலாந்து தொடர் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்பின் டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி காரணமாக தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இந்த தொடரும் அடுத்த மாதமே நடக்க உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருப்பார். டி 20 அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக் டொனால்ட் நியூசிலாந்துக்கு செல்வார். இதற்காக இரண்டு தனி தனி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

 வாய்ப்பு

வாய்ப்பு

டி 20 அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் யாரும் டி 20 அணியில் இடம்பெறவில்லை.சர்வதேச போட்டிகளில் ஆடாத 5 இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய டி 20 அணியில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தேர்வாகி உள்ளனர்.

Story first published: Wednesday, January 27, 2021, 18:17 [IST]
Other articles published on Jan 27, 2021
English summary
Australia chooses two different squads against South Africa and New Zealand at the same time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X