சாலை விபத்தில் சிக்கிய ஷேன் வார்னே.. மருத்துவமனையில் அனுமதி.. வலி தாங்க முடியாமல் கூறிய வார்த்தைகள்

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கியதால் அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் ஷேன் வார்னே. இவர் தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் எப்போது ஆக்டீவாக இருந்து வரும் வார்னேவுக்கு நேற்றைய தினம் சற்று மோசமாக அமைந்துள்ளது.

“தப்பு பண்றாங்க” விதிமுறையை மீறிய புதிய அணி? பிசிசிஐ-யிடம் சென்ற 2 பழைய அணிகள்.. விரைவில் நடவடிக்கை“தப்பு பண்றாங்க” விதிமுறையை மீறிய புதிய அணி? பிசிசிஐ-யிடம் சென்ற 2 பழைய அணிகள்.. விரைவில் நடவடிக்கை

சாலை விபத்தில் சிக்கினார்

சாலை விபத்தில் சிக்கினார்

நேற்றைய தினம் ஷேன் வார்னே தனது மகன் ஜாக்சனுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் ஜாலியாக வலம் வந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினர். இதனால் சுமார் 15 மீட்டர் தூரம் வரை ஷேன் வார்னே சாலையில் தேய்ந்துக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

வார்னே விளக்கம்

வார்னே விளக்கம்

இந்த விபத்தை கண்டு அருகில் இருந்தோர் ஒன்று திரள ஷேன் வார்னே முதலுதவி அளிக்கப்பட்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து பேசிய அவர், அடி பலமாக பட்டுவிட்டதால் காயத்தால் அவதிப்படுகிறேன் என கூறியிருந்தார். எனினும் அவர் அதனை பெரிதுப்படுத்தாமல் வீட்டில் ஓய்வெடுத்தார்.

காயத்தின் பாதிப்பு

காயத்தின் பாதிப்பு

இந்நிலையில் காயத்தின் பாதிப்பு பெரிதாக இருப்பது போன்று தெரிகிறது. இன்று காலை முதல் அவரால் வலி தாங்க முடியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரின் காலில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் வர்ணனையாளராக ஷேன் வார்னே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே விரைவில் அவர் குணமடைந்து ஆஷஸ் தொடருக்கு வர்ணனை செய்ய திரும்புவார் என அவரது உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia Cricketing legend Shane Warne injures himself in motorbike accident
Story first published: Monday, November 29, 2021, 15:47 [IST]
Other articles published on Nov 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X