For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை பொளந்து கட்டியது ஆஸ்திரேலியாவுக்கு உலக சாதனை பாஸ்!

கான்பெரா: இந்தியாவை அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்கடித்த ஆஸ்திரேலிய அணி அதில் ஒரு புதிய உலக சாதனையையும் படைத்து விட்டது.

இதற்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகள் அணி உள்ளூரில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து 18 வெற்றிகளைப் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளது ஆஸ்திரேலியா.

நேற்று இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் கிடைத்த தொடர்ச்சியான 19வது ஒரு நாள் வெற்றியாகும். இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகளின் சாதனையை அது தகர்த்துள்ளது.

2014ம் ஆண்டு முதல்

2014ம் ஆண்டு முதல்

2014ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கணக்கு தொடங்கியது. இது 2016 ஜனவரி 20ம் தேதி உலக சாதனையாக மாறியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகள்

உலகக் கோப்பைப் போட்டிகள்

இந்த சாதனைப் பட்டியலில் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணி சந்தித்த உலகக் கோப்பைப் போட்டிகளும் அடக்கமாகும்.

இரு கேப்டன்கள் தலைமையில்

இரு கேப்டன்கள் தலைமையில்

மைக்கேல் கிளார்க் தலைமையில் தொடங்கிய சாதனைப் பயணம், தற்போது ஸ்டீபன் ஸ்மித் தலைமையில் உலக சாதனையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனையாளர்கள் பட்டியல்.. இந்தியா மிஸ்ஸிங்!

சாதனையாளர்கள் பட்டியல்.. இந்தியா மிஸ்ஸிங்!

உள்ளூரில் அதிக அளவிலான தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற சாதனை அணிகள் விவரம்: ஆஸ்திரேலியா 19, மேற்கு இந்தியத் தீவுகள் 18, இலங்கை 17, தென் ஆப்பிரிக்கா 16, தென் ஆப்பிரிக்கா 14.

இந்தியாவின் நிலை ரொம்பவே மோசம்

இந்தியாவின் நிலை ரொம்பவே மோசம்

உள்ளூரில் புலி என்று கூறப்படும் இந்தியாவால் உள்ளூரிலேயே சாதனை படைக்க முடியவில்லை. இத்தனைக்கும் உலக அளவில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் இருந்தும் கூட என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான விஷயம்தான்.

Story first published: Thursday, January 21, 2016, 8:15 [IST]
Other articles published on Jan 21, 2016
English summary
Steve Smith captained Australia defeated India by 25 runs in the 4th One Day International to set a world record.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X