For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிலும் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் நிலைமை தான் கொஞ்சம் வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகி உள்ளார்.

தற்போது மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோ

ஹேசல்வுட் விலகல்

ஹேசல்வுட் விலகல்

தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக கருதப்படும் ஜோஸ் ஹேசல்வுட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தார். எனினும் அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்தபடி இன்னும் அவருடைய காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஹேசல்வுட் விலகியுள்ளார். இது குறித்து பேசிய அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

விரக்தி

விரக்தி

இதனால் என்னால் தொடர்ந்து இரண்டு போட்டியில் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு அணி நிர்வாகம் முடிவு எடுக்கும். ஆனால் முதல் போட்டியில் தாம் விளையாடுவது சந்தேகமே. நான் நினைத்தது போல் என்னுடைய உடல் தகுதி குணமடையவில்லை. தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒரு போட்டியில் விளையாடி விட்டு மீண்டும் காயம் காரணமாக விலகுவது பெரும் விரக்தியை தருகிறது.

3 வீரர்கள் இல்லை

3 வீரர்கள் இல்லை

எப்போதும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடுவது தான் கடினம். அதன் பிறகு நமது உடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து விளையாடுவோம். அதன் பிறகு கடைசி போட்டியில் விளையாடும் போது உடல் அசதியாகிவிடும். ஆனால் இம்முறை தொடர்ந்து என்னால் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என நினைக்கிறேன் என்று ஹேசல்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வேக பந்துவீச்சாளர் வைத்து தான் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் பேட் கமின்ஸ் மற்றும் ஸ்காட் போலான்ட் ஆகியோர் வேக பந்துவீச்சாளர்களாகவும் நாதன் லயன் சுழற் பந்துவீச்சாளராகவும் களமிறங்க கூடும். பேட்ஸ்மேன்கள் டிராவிட், மார்னஸ் லாபஸ்செங் ஆகியோர் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளராக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா, ஸ்டீவன் ஸ்மித், மானஸ் லாபஸ்சேங், ட்ராவல்ஸ் ஹெட், பீட்டர்ஸ் ஹேண்ட்ஸ்குப், அலெக்ஸ் ஸ்கேரி ஆகியோர் விளையாட கூடும்.

ஹேச்ல்வுட் அபாயம்

ஹேச்ல்வுட் அபாயம்

ஜோஸ் ஹேசல்வுட் எப்போதும் இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மின்களுக்கு மிகவும் ஆபத்தான வீரராக இருப்பார். ஐந்தாவது ஸ்டெம் லைனில் பந்துவீசி விராட் கோலி போன்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடியவர். தற்போது அவர் இல்லாதது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் ஸ்காட் போலாந்த் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனினும் அவரும் காயத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 5, 2023, 17:35 [IST]
Other articles published on Feb 5, 2023
English summary
Australia fast bowler Josh hazlewood injured and doubtful for nagpur test இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X