யாரு பெஸ்ட் பிளேயர்..? ஸ்மித்தா.. கோலியா? ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..!!

கோலியின் சாதனைகளை அடிச்சு நொறுக்கிய ஸ்மித்

கேன்பரா: ஸ்மித் டெஸ்ட் போட்டிகளிலும், விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று ஜாம்பவான் ஷேன் வார்னே கூறியிருக்கிறார்.

ஆர்ச்சரால் அடி வாங்கி தி பெஸ்ட் கம்பேக்காகி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். ஆஷஸ் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அணியில் தாம் ஜாம்பவான் என்பதை நிரூபித்துள்ள அவர், கோலியை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் முதலிடத்தையும் தற்போது பிடித்துள்ளார். அவரது அசாத்திய பேட்டிங் திறனை முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர்.

வார்னே பேட்டி

வார்னே பேட்டி

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான வார்னே தற்போது ஸ்மித் மற்றும் கோலி ஆகியோர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஒத்துக் கொள்கிறேன்

ஒத்துக் கொள்கிறேன்

ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன். அதை நான் ஒத்து கொள்கிறேன். மேலும் அவர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார்.

கோலியின் திறமை

கோலியின் திறமை

அவரது சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவர் சிறந்த வீரராக வலம் வருகிறார். அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது அசாத்திய திறமை காரணமாக சிறந்து விளங்குகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இருவரில் யார் பெஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்கள்? என்னை பொறுத்தவரை கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது கவனத்தை சிதற விடாமல் ரன்களை குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை தனது திறமையின் மூலம் அதைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

தவறு கிடையாது

தவறு கிடையாது

எனவே ஸ்மித்தை டெஸ்ட் போட்டிகளில் சாதித்து வருகிறார். கோலியை மூன்று வகை கிரிக்கெட்டிலும் நான் சிறந்த வீரர் என்று கூறுவதில் தவறு ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia former bowler Shane Warne praised steve smith and virat kohli for their batting.
Story first published: Saturday, September 7, 2019, 11:04 [IST]
Other articles published on Sep 7, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X