முட்டாப்பயலே..! முன்னாள் கேப்டனை விமர்சித்த ஜென்டில்மேன் வீரர்.. டுவிட்டரில் வார்த்தை போர்

இங்கிலாந்து முன்னாள் கேப்டனை டிவிட்டரில் விளாசிய கில்கிறிஸ்ட்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை, முட்டாள் என்று ஆஸி. முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய இடையேயான உலக கோப்பை செமி பைனல் போட்டியின் ட்விட்டரில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அப்போது, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கும், கில்கிறிஸ்டுக்கும் முட்டிக் கொண்டது.

ஜேசன் ராய் அதிரடி ஆட்டம், ஆர்ச்சர், வோக்ஸின் துல்லிய பந்துவீச்சால், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த இங்கிலாந்து பைனலுக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஆஸ்திரேலிய முன்னணி பந்து வீச்சாளர்களின் பந்தாடினார்.

WATCH: இந்த விஷயத்துடன் கடைசி வரை போராடிய தல தோனி..! வெளி வராத உண்மை வீடியோ..!

பந்துவீச்சு தோல்வி

பந்துவீச்சு தோல்வி

முதல் 15 ஓவர்களில் அவரது ரன் குவிப்பையும். அதிரடியையும் ஆஸி. பவுலிங்கால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

வெறும்கால்களுடன் பவுலிங்

அதில், ஆஸ்திரேலிய பவுலர்கள் கண்டிப்பாக வெறும் கால்களுடன் பந்து வீச வேண்டும் என்று கூறினார். அந்த டுவீட்டை கண்ட ஆஸி. முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் பொங்கிவிட்டார். அந்த பதிவுக்கு அவர் பதிலடியும் கொடுத்தார்.

முட்டாள் என விமர்சனம்

வாகன் டுவீட்டை மீண்டும் பதிவிட்டு, முட்டாள் என்று விமர்சித்தார். அதற்கு பதிலடியாக மைக்கேல் வாகனும், வெறும் கால்களுடன் ஜிப் பைல் ஒன்றை பதிவிட்டார். 1992க்கு பிறகு, இங்கிலாந்து அணி உலக கோப்பை பைனலுக்கு இறுதிக்கு முன்னேறியதற்காக அநாகரிகமாக நடக்கக் கூடாது என்று வாகனை ரசிகர்களும் விமர்சிக்கின்றனர்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்த போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி தற்போது தான் இறுதிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australia former player adam gilchrist says Michael Vaughan is an idiot.
Story first published: Saturday, July 13, 2019, 13:47 [IST]
Other articles published on Jul 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X