For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவலியாக மாறும் 4ம் இடம்.. சொன்னா கேளுங்க... ராகுல் தான் அதுக்கு சரி

டெல்லி:இந்திய அணி 4ம் வரிசையில் கேஎல் ராகுலை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. அதற்கான அணியில் யார்,யார் என்பது ஓரளவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில இடங்களுக்காக வீரர்கள் யார் என்று முடிவு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோகித், தவான், கோலி ஆகிய மூவரும் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர்.

கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்... டெஸ்ட் போட்டி ரத்துக்கு சப்போர்ட் செய்த ஐசிசி கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்... டெஸ்ட் போட்டி ரத்துக்கு சப்போர்ட் செய்த ஐசிசி

4ம் வரிசையில் யார்?

4ம் வரிசையில் யார்?

4ம் வரிசை தான் இந்திய அணிக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ரகானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பார்த்தாகி விட்டது.

நல்ல விளையாடினார்

நல்ல விளையாடினார்

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு 4ம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். இந்திய அணி நிர்வாகமும் மகிழ்ச்சி அடைந்தது.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

ஆனால் ராயுடுவின் ஆட்டம்.. அதற்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சொதப்பலோ... சொதப்பல்.

அதிரடியாக நீக்கம்

அதிரடியாக நீக்கம்

ஆஸ்திரேலிய தொடரில் முதல் 3 போட்டிகளில் ஆடிய ராயுடு, எடுத்ததோ வெறும் 33 ரன்கள். விளைவு.. 4வது போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங்கில் சொதப்பிய அவர்... பீல்டிங்கையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் 4ம் இடத்துக்கு மீண்டும் பங்கம் வந்தது.

கருத்து

கருத்து

இதையடுத்து, இந்திய அணியின் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். போதாத குறைக்கு... வெளிநாட்டு அணிகளின் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் கருத்து சொல்கிறேன் என்று கூறி ஏதாவது பேசிவிட்டு போகின்றனர்.

யார் உள்ளனர்?

யார் உள்ளனர்?

அந்த வரிசையில் இப்போது வாய் திறந்திருப்பது... ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இது குறித்துஅவர் கூறியதாவது:4ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று பல கட்டங்களில் நிறைய வீரர்களை பரிசோதித்துவிட்டது.

விளையாட வாய்ப்பு

விளையாட வாய்ப்பு

ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் என பலர் இருக்கலாம். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளித்திருக்கலாம். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

ராகுல் விளையாடலாம்

ராகுல் விளையாடலாம்

ஐபிஎல்லில் அவருடன் இணைந்து செயல்படுவது உற்சாகமாக இருந்தது. அவர் சிறந்த தேர்வாக இருந்திருப்பார். ஆனால் அவர் இனிமேல் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், தற்போது இருக்கும் வீரர்களில் கேஎல் ராகுலை 4ம் வரிசையில் இறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 16, 2019, 10:55 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Australia great ricky ponting makes surprise pick for india’s no. 4 at 2019 world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X