For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. டீமா இது?.. வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்த மஞ்சள் படை.. 3:0 கணக்கில் டி 20 தொடரை இழந்தது!

தாக்கா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை வங்கதேசம் அணி 3:0 என்ற கணக்கில் வென்றுள்ளது. வரிசையாக நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. கடைசி இரண்டு நாள் ஒலிம்பிக் ஆட்டங்கள் டோக்கியோவில் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஒலிம்பிக் நடந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய கிரிக்கெட் தொடர்கள் நடந்து வருகின்றன.

ஒலிம்பிக் கோல்ப் 2020.. விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டம் திடீரென மழையால் பாதிப்பு.. ஒத்திவைப்பு! ஒலிம்பிக் கோல்ப் 2020.. விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டம் திடீரென மழையால் பாதிப்பு.. ஒத்திவைப்பு!

இந்தியா vs இங்கிலாந்து தொடர், ஆஸ்திரேலியா vs வங்கதேசம், பாகிஸ்தான் vs மேற்கு இந்திய தீவுகள் தொடர் என்று பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடந்து வருகின்றன.

எப்படி

எப்படி

ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.ஆஸ்திரேலியா 17 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் 6ம் இடம் வகித்து வருகிறது. நேற்று முதல்நாள் 4வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா ஒலிம்பிக்கில் நேற்று 6வது இடத்திற்கு பின் தங்கியது. இன்னொரு பக்கம் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா மண்ணை கவ்வி உள்ளது.

தோல்வி

தோல்வி

இன்று தாக்காவில் நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வங்கதேசத்திடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வங்கதேசம் முதலில் ஆடி 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா வெறும் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தொடர் காலி

தொடர் காலி

இதனால் ஆஸ்திரலியாவிற்கு எதிரான டி 20 தொடரை வங்கதேசம் அணி 3:0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் டி 20 போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் வெறும் 108 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது

இரண்டாவது

இதன்பின் இரண்டாவது டி 20 போட்டியிலும் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய வங்கதேசம் 18.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி 20 தொடரில் இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளது.

பிட்ச்

பிட்ச்

இந்த போட்டியில் தாக்காவின் பவுலிங்கிற்கு ஆதரவான பிட்சை வங்கதேசம் மிக சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது. இது எங்கள் ஏரியா, இதில் நாங்கதான் கிங் என்பதை மூன்று போட்டியிலும் வங்கதேசம் சொல்லி சொல்லி அடித்தது. அதிலும் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 127 ரன்களை டிபன்ட் செய்தது எல்லாம் எல்லாம் வேற லெவல் சம்பவம்.

வேற லெவல்

வேற லெவல்

இந்த கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனாலும் கூட வங்கதேசம் இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. முகமதுல்லா பேட்டிங், நசம், ஷாகிப், முஸ்தக்பிர் ரஹ்மான் பவுலிங் என்று வங்கதேசம் இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக ஆடியது. ஆனால் ஆஸ்திரேலியாவோ கத்து குட்டி அணி போல முதல் போட்டியில் இருந்தே வங்கதேச பிட்சில் திணறி வருகிறது.

வீரர்கள்

வீரர்கள்

மேத்யூ வேட் தலைமையில் அவ்வளவு அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிதான் களமிறங்கி உள்ளது. ஆனாலும் கூட இந்த அணியில் சில மூத்த வீரர்கள், டேனியல் கிறிஸ்டின் போன்ற டி 20 அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

Story first published: Saturday, August 7, 2021, 13:37 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
Australia loses the third T 20 match by 10 days and the whole series against Bangladesh in 3:0 points.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X