For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்பத்திரிக்கு போக ரெடியா? பவுன்சர் போட்டு காலி பண்ணிடுவோம்.. !! மே.இ. தீவுகளை எச்சரிக்கும் அவர்

Recommended Video

இந்த உலக கோப்பையில் தோனியுடன் சவால் விட போகும் வீரர் இவர்தான்

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பவுன்சர்கள் காத்து இருக்கின்றன என்று ஆஸ்திரேலியா அணி வீரர் நாதன் கூல்ட்டர் நைல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக கோப்பை போட்டிகள் மெதுவாக விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது வரும் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகள். இந்த போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது.

கடந்த 31ம் தேதி நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அதற்குள் யாரும் மறந்துவிட முடியாது. 105 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.

பவுன்சர் கை கொடுத்தது

பவுன்சர் கை கொடுத்தது

காரணம்.... மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுன்சர்கள் தான். பாகிஸ்தான் வீரர்கள் பெவிலியன் திரும்ப அந்த அணியின் பவுன்சர் பந்துவீச்சு பெருமளவில் கை கொடுத்தது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி ஆப்கான் அணியின் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வென்றது. இந்நிலையில் வலுவான மே.இ.தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

வீரர்கள் அதிர்ச்சி

வீரர்கள் அதிர்ச்சி

மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர், தாமஸ், ரசல் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களின் புருவத்தை குறி வைக்கும் உயரத்துக்கு பந்துகளை வீசி அதிர்ச்சி அளித்தனர். வரும் வியாழக்கிழமையன்று நடைபெறும் ஆஸி.க்கு எதிராக கிமார் ரோச் களம் புகுந்து விட்டால், மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும்.

நாதன் எச்சரிக்கை

நாதன் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அணியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ், நாதன் கூல்ட்டர் நைல் போன்றவர்கள் அணியில் இருக்கின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் நாதன் கூல்ட்டர் நைல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிகிச்சைக்கு ரெடியா?

சிகிச்சைக்கு ரெடியா?

அவர் கூறியிருப்பதாவது: மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சிகிச்சை அளிக்க காத்திருக்கிறோம். அது பவுன்சர் பந்துகள் வழியாக. எங்களின் பந்துவீச்சால் அவர்களை திணறடிக்க போகிறோம்.

நிச்சயம் உண்டு

நிச்சயம் உண்டு

அந்த ஒரு அணிக்கு மட்டும் என்று எண்ணிவிட வேண்டாம். உலக கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள அனைத்து அணிகளுக்கும் பவுன்சர் சிகிச்சை தர இருக்கிறோம். ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் கன்பார்ம். மைதானங்களின் தன்மை மாறியிருக்கிறது. எப்படி இருந்தாலும் பவுன்சர்கள் நிச்சயம் உண்ம‘டு என்றார்.

Story first published: Sunday, June 2, 2019, 17:55 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
Australia pacer nathan coulter nile issues warning to west indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X