For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலில் ஆடிய அணி 50 ஓவரில் 596 ரன்கள்.. அடுத்து ஆடிய அணி 25 ரன்களுக்கு ஆல்-அவுட்

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களில் 596 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கையாக எதிரணி வெறும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது.

ஆஸ்திரேலியாவில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அதில் நார்தர்ன் டிஸ்ரிக்ட்ஸ் மற்றும் போர்ட் அடிலெய்டு அணிகள் மோதின.

[ நிறைய விக்கெட் எடுத்துட்டு "பந்து சரியில்லை"ன்றீங்களே.. இது எப்படி இருக்கு தெரியுமா? ]

4 சதங்கள், 596 ரன்கள்

4 சதங்கள், 596 ரன்கள்

முதலில் பேட்டிங் செய்த நார்தர்ன் டிஸ்ரிக்ட்ஸ் அணியில் டேகன் மெக்ஃபர்லின் (80 பந்துகளில் 136 ரன்கள்), டபிதா சாவில் (56 பந்துகளில் 120 ரன்கள்), சாம் பெட்ஸ் (71 பந்துகளில் 124 ரன்கள்), டார்சி பிரவுன் (84 பந்துகளில் 117 ரன்கள்) என நான்கு சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நார்தர்ன் டிஸ்ரிக்ட்ஸ் அணி 596 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழந்து இருந்தது.

3 சிக்ஸர்கள் மட்டுமே

3 சிக்ஸர்கள் மட்டுமே

இது போன்ற அதிக ரன்கள் குவியும் போட்டிகளில் சிக்ஸர்கள் தான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த போட்டியில் வெறும் 3 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆனால் அதிக ரன்கள் பவுண்டரிகள் மூலம் கிடைத்தது. சுமார் 64 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு இருந்தது.

75 வையிடுகள் கொடுத்து அதிர்ச்சி

75 வையிடுகள் கொடுத்து அதிர்ச்சி

எதிரணியான போர்ட் அடிலெய்டு மிக மோசமாக பந்து வீசியதே நார்தர்ன் டிஸ்ரிக்ட்ஸ் அதிக ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது. போர்ட் அடிலெய்டு அணி 88 எக்ஸ்ட்ராஸ் கொடுத்தது. அதில் 75 வையிடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ரன்கள் மட்டுமே

25 ரன்கள் மட்டுமே

அடுத்து ஆடிய போர்ட் அடிலெய்டு அணி வெறும் 10.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 25 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. நார்தர்ன் டிஸ்ரிக்ட்ஸ் அணி 571 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, October 16, 2018, 12:37 [IST]
Other articles published on Oct 16, 2018
English summary
Australia’s women cricket team scored 596 runs in a one day match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X