For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

19 பந்தில் ஆஸி. வீரர் அரைசதம்.. வெறித்தனமாக பந்துவீசிய அக்சர் பட்டேல்.. டிம் டேவிட் இறுதியில் அபாரம்

ஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Recommended Video

IND vs AUS அதிரடி காட்டிய Cameron Green! அடக்கிய Rohit படை

3 போட்டிகள் கொண்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இந்திய அணியிலும், ஆஸ்திரேலிய அணியில் சென் அப்பார்ட்க்கு பதிலாக ஜாஸ் இங்கிலிஷ் சேர்க்கப்பட்டார்.

அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கேமிரான் கிரின் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 12 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனையடுத்து பும்ரா வீசிய 3வது ஓவரிலும் ஆஸ்திரேலியா 17 ரன்கள் குவித்தது. இந்த வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறினர்.

19 பந்தில் அரைசதம்

19 பந்தில் அரைசதம்

கேமிரான் கிரின் 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 3.5வது ஓவரில் 50 ரன்களை கடந்தது. ஆரோன் பிஞ்ச் 7 ரன்களில் வெளியேற, கிரின் 52 ரன்களை வெளியேறினார். இதனையடுத்து பவர்பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. இந்த நிலையில், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

அக்சர் பட்டேல் அபாரம்

அக்சர் பட்டேல் அபாரம்

இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் சாஹல் பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தது. மேத்தீவ் வெட் 1 ரன்னிலும், ஜாஸ் இங்கிலிஷ் 24 ரன்களிலும் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

டிம் டேவிட் அரைசதம்

டிம் டேவிட் அரைசதம்

இறுதியில் அதிரடி வீரர் டிம் டேவிட், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் 21 ரன்களும், பும்ரா வீசிய 19வது ஓவரில் 18 ரன்களும் அடிக்கப்பட்டது. இதனால் டேவிட் 25 பந்தில் அரைசதம் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தார். இந்திய அணி பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Story first published: Sunday, September 25, 2022, 21:35 [IST]
Other articles published on Sep 25, 2022
English summary
Australia set 187 runs target for india in 3rd t2oi19 பந்தில் ஆஸி. வீரர் அரைசதம்.. வெறித்தனமாக பந்துவீசிய அக்சர் பட்டேல்..புலி போல் பாய்ந்து எலியான ஆஸி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X