For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா செய்த சம்பவம்.. உடைந்து நொறுங்கும் ஆஸி. அணி.. புரட்சியில் இறங்கிய மூத்த வீரர்கள்.. பரபரப்பு

சென்னை: ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு எதிராக வீரர்கள் கொதித்து எழுந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரே நேரத்தில் வேறு வேறு நாடுகளில் இரண்டு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செலக்ட் ஆகணும்..முக்கியத்துவம் கோலிக்கு தெரியும்.கம்பீர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செலக்ட் ஆகணும்..முக்கியத்துவம் கோலிக்கு தெரியும்.கம்பீர்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.

எப்படி

எப்படி

இதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருப்பார். டி 20 அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக் டொனால்ட் நியூசிலாந்துக்கு செல்வார். இதற்காக இரண்டு தனி தனி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த பயிற்சியாளர் நன்றாக செயல்படுகிறார் என்று கண்டுபிடிக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முடிவு

முடிவு

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு எதிராக வீரர்கள் கொதித்து எழுந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இவரின் பயிற்சி முறை பிடிக்கவில்லை. இவரை சரியாக அணுக முடியவில்லை. பயிற்சியாளர் சரியில்லை என்று கூறியுள்ளனர்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள் இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எங்களால் பயிற்சியாளரிடம் பேச முடியவில்லை. அவர் தவறாக திட்டம் வகுக்கிறார். வீரர்களை அவர் நம்புவது இல்லை என்று மூத்த வீரர்கள் சிலர் பயிற்சியாளருக்கு எதிராக புரட்சியில் குதித்து உள்ளனர்.

 புரட்சி

புரட்சி

இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த செய்திகளை வதந்தி என்று கூறிவிட முடியாது. நான் கவனமாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த கருத்துக்களை, செய்திகளை நான் பொய் என்று கூறிவிட மாட்டேன். இது என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம். வீரர்களிடம், பவுலர்களிடம் இது குறித்து பேசுவேன், என்று கூறியுள்ளார். இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா மோசமாக தோல்வி அடைந்ததுதான் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் காரணம் என்கிறார்கள்.

Story first published: Tuesday, February 2, 2021, 11:38 [IST]
Other articles published on Feb 2, 2021
English summary
Australia team coach faces heat from the players after loss to team India says Sources
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X