For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உப்புமா சாப்பிடுவது போல உலக கோப்பைகளை வாங்குகிறதே ஆஸ்திரேலியா..! பின்னணி என்ன?

By Veera Kumar

சிட்னி: பிற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு அணியான ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை வலுவாக ஆழப்பதித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர், 1975ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. முதல் 2 உலக கோப்பை தொடரிலும், முழுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. 1983ல், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கத்தை முடித்து வைத்தது. அதன்பிறகு இதுவரை வெஸ்ட் இண்டீஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த அணி தனது நிலையைவிட்டு கீழே இறங்கியபடிதான் உள்ளது. ஆனால், கிரிக்கெட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் ஜாம்பவான் என்றால் அது ஆஸ்திரேலியாதான்.

எப்போதுமே இப்படித்தான்

எப்போதுமே இப்படித்தான்

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், முதல் உலக கோப்பை தொடரில் இருந்தே தொடங்கிவிட்டபோதிலும், முதல் முறையாக, கோப்பையை வென்றது 1987ல்தான். இதன்பிறகு, 1992 உலக கோப்பையின்போது சற்று பதுங்கியிருந்ததை போல காணப்பட்ட ஆஸ்திரேலியா, 1996ல் பைனலுக்கு வந்தது.

சொல்லியடிக்கும் கில்லி

சொல்லியடிக்கும் கில்லி

1999 முதல் ஆஸ்திரேலியா சொல்லியடிக்கும் கில்லியாக மாறி கோப்பைகளை மாறிமாறி, வாங்கிவருகிறது. 1999, 2003, 2007 என ஹாட்ரிக் கோப்பைகளை வாங்கி ஆஸ்திரேலியாவுக்கு, 2011ல் பிரேக் போட்டது இந்தியா. ஆனால் இப்போது மீண்டும் ஆஸ்திரேலியா 2015ல் கோப்பையை நம்மிடமிருந்து பறித்துவிட்டது.

விளையாட்டு கலாச்சாரம் அப்படி

விளையாட்டு கலாச்சாரம் அப்படி

எப்படி ஆஸ்திரேலியாவால் மட்டுமே இது முடிகிறது. கிரிக்கெட் விளையாடும் வேறு உலக நாடுகளால் இதை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும், கேள்வியும் பலருக்கும் எழுவது இயல்பானதே. இதற்கு, ஆஸ்திரேலியாவில் நிலவும் விளையாட்டு கலாச்சாரமே முக்கிய காரணம் என்கின்றனர், விளையாட்டு நிபுணர்கள்.

போட்டி சூழல்

போட்டி சூழல்

மாஜி கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் "ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் முழுக்க, முழுக்க, போட்டி நிறைந்த சூழலில்தான் வளருகிறார்கள். கிரிக்கெட்டில் என்றில்லை, எல்லா இடமும் அப்படித்தான். அவர்களது சமூக கட்டமைப்பு முழுக்கவே போட்டி நிறைந்ததாக உள்ளது.

இடத்தை பிடிக்க அடுத்தவர் ரெடி

இடத்தை பிடிக்க அடுத்தவர் ரெடி

இதுபோன்ற போட்டிச் சூழல்தான், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்சேல் ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்களை உலகுக்கு அளித்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதாக வைத்துக் கொண்டால், உங்கள் கழுத்துக்கு கீழே, போட்டியாளர் விடும் மூச்சுகாற்று பட்டுக் கொண்டு இருக்கும். அந்த அளவுக்கு, போட்டியாளர்கள் நெருக்கமாக நின்று கொண்டிருப்பார்கள். எனவே அனைத்து போட்டிகளிலும், உங்கள் முழு திறனை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். பிறகு, அதுவே பழகிவிடும்.

எல்லா விளையாட்டுகளிலும் இப்படித்தான்..

எல்லா விளையாட்டுகளிலும் இப்படித்தான்..

ஆஸ்திரேலிய விளையாட்டு பற்றி தெரிந்த அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். அது ரக்பியாக இருந்தாலும், கால்பந்து, நீச்சல், டென்னிஸ், ஹாக்கி என்று எந்த விளையாட்டாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் போட்டிதான் நிலவுகிறது என்றார்.

ஆஸ்திரேலியா வலிமையானது

ஆஸ்திரேலியா வலிமையானது

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் சாப்பல் கூறுகையில், :ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டுமானால், நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அவர்கள் தவறு செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா அவ்வளவு கச்சிதமாக விளையாடியது.

கவனமாக ஆட வேண்டும்

கவனமாக ஆட வேண்டும்

ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான அணியாக உள்ளது. அந்த அணியை தோற்கடிக்க வேண்டுமானால், நீங்கள் அனைத்து துறையிலுமே சிறப்பாகவும், மிகச்சரியாகவும், ஆட வேண்டும் என்றார்.

பதுங்கி பாய்ந்தது

பதுங்கி பாய்ந்தது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. 31 வருடங்களில் இப்படி நடந்தது அதுதான் முதல்முறை. ஐசிசி தரவரிசையில், 4வது இடத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று ஆஸ்திரேலியாவுக்கு. ஆனால், 7 மாதங்கள் கழித்து பார்த்தால், ஆஸ்திரேலியா உலக சாம்பியன்.

எப்போதுமே டாப்

எப்போதுமே டாப்

ஒட்டுமொத்தமாக பார்த்தாலும், ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் அணிகள் ஆஸ்திரேலியாதான் முதலிடத்திலுள்ளது. இதுவரை ஆடிய 856 போட்டிகளில் 529 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. அதாவது, தோராயமாக 65 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது.

நோ சென்டிமென்ட்

நோ சென்டிமென்ட்

கவாஸ்கர் மேலும் கூறுகையில், ஆஸ்திரேலிய தேர்வு குழு என்றுமே சென்டிமென்ட்டாக யோசித்தது கிடையாது. ஒரு வீரர் மிகச்சிறந்த ஜாம்பவானாக இருந்தாலும், அவரைவிட இளம் வயதில் யாராவது துடிப்போடு ஆடுகிறார்களா என்பதைத்தான் தேர்வுக்குழு கவனிக்கும். இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பும் அளிக்கப்படும் என்றார்.

உலக நாயகன்

உலக நாயகன்

இதுபோன்ற காரணங்களால்தான், மொத்தம் 11 உலக கோப்பைகளில், 7 முறை பைனலுக்கு வந்து, அதில் 5 முறை கோப்பையை வாங்கியுள்ளது ஆஸ்திரேலியா.

Story first published: Monday, March 30, 2015, 10:44 [IST]
Other articles published on Mar 30, 2015
English summary
Generally the competitive nature of the Australians in all walks of life, not just cricket, where they want to be the best has certainly stood them in good stead. Most important is that they have a system that gives plenty of competition.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X