சேவாக்கிற்கு பின் பாகிஸ்தானை புரட்டி எடுத்த வார்னர்.. டான் பிராட்மேன், கோலி ரெக்கார்டு காலி!

David Warner hit triple century| சேவாக்கிற்கு பின் பாகிஸ்தானை புரட்டி எடுத்த வார்னர்|

அடிலெய்டு : பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

இந்த முச்சதம் மூலம் டான் பிராட்மேன், விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை முறியடித்து இருக்கிறார் டேவிட் வார்னர்.

மேலும், சேவாக் அடித்த முச்சதத்திற்கு பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முச்சதம் அடிக்கும் வீரர் வார்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பகல் - இரவு டெஸ்ட் போட்டி

பகல் - இரவு டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு போட்டியாக அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது.

அபார துவக்கம் அளித்த வார்னர்

அபார துவக்கம் அளித்த வார்னர்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் அபார துவக்கம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், வார்னர் - லாபுஷாக்னே ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

முச்சதம்

முச்சதம்

லாபுஷாக்னே 162 ரன்கள் குவித்த நிலையில், வார்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் கடந்து, முச்சதம் அடித்து சாதனை செய்தார். இது தான் வார்னரின் முதல் முச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது

ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது

389 பந்துகளில் 300 ரன்களை கடந்த வார்னர், 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போது ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து இருந்தது.

டான் பிராட்மேனின் சாதனை காலி

டான் பிராட்மேனின் சாதனை காலி

முச்சதம் அடிக்கும் நான்காவது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடிலெய்டு மைதானத்தின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான டான் பிராட்மேனின் 299 ரன்கள் சாதனையை முறியடித்த வார்னர் 335 ரன்களை எட்டினார்.

சேவாக் அடித்த முச்சதம்

சேவாக் அடித்த முச்சதம்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முச்சதம் அடிக்கும் நான்காவது வீரர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வீரேந்தர் சேவாக் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 309 ரன்கள் குவித்து இருந்தார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோரை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார் வார்னர். அவர்கள் இருவரும் 334 ரன்கள் எடுத்து இருந்தனர்.

மேத்யூ ஹெய்டன் முதல் இடம்

மேத்யூ ஹெய்டன் முதல் இடம்

இதே பட்டியலில் மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வார்னர் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார்.

பகலிரவில் முதல் இடம்

பகலிரவில் முதல் இடம்

பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் அசார் அலி 456 ரன்கள் குவித்து இருந்த நிலையில், அதை முந்திய வார்னர் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 534 ரன்கள் குவித்துள்ளார்.

கோலியை முந்தினார்

கோலியை முந்தினார்

மேலும், 2019ஆம் ஆண்டில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி இருக்கிறார் வார்னர். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் கோலி 254 ரன்கள் அடித்து இருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australia vs Pakistan : David Warner hit triple century and breaks Don Bradman record. He also surpass Virat Kohli’s highest score in 2019.
Story first published: Saturday, November 30, 2019, 15:55 [IST]
Other articles published on Nov 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X