பீல்டிங் செய்ய சொன்னா கொட்டாவி விட்டுகிட்டு இருக்காங்க.. இளம் வீரர்களை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!

அடிலெய்டு : வாசிம் அக்ரம் மோசமாக பீல்டிங் செய்த இளம் பாகிஸ்தான் வீரர்களை விளாசித் தள்ளினார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

பகல் - இரவு டெஸ்ட் போட்டியான இதில், பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்கள் சொதப்பலாக பீல்டிங் செய்தனர். அதைக் கண்ட முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்களை விளாசித் தள்ளினார்.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 589 ரன்கள் குவித்தது.

டேவிட் வார்னர் விளாசல்

டேவிட் வார்னர் விளாசல்

டேவிட் வார்னர் மிரட்டலாக ஆடி முச்சதம் அடித்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் திணறியது பாகிஸ்தான் அணி. அதே சமயம், பீல்டிங்கிலும் சொதப்பியது. அவர் இரட்டை சதம் அடித்த பின் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டனர்.

ஷஹீன் ஷா அப்ரிடி

ஷஹீன் ஷா அப்ரிடி

இளம் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பைன் லெக்கில் பீல்டிங் நிறுத்தப்பட்டு இருந்தார். அவர் ஒரு முறை பவுண்டரியை நோக்கி வந்த பந்து எந்த பக்கம் வருகிறது என்றே தெரியாமல், ஏனோ தானோவென மறுபக்கம் ஓடினார். பந்து பவுண்டரி சென்றது.

பந்தை தட்டிவிட்டார்

பந்தை தட்டிவிட்டார்

மீண்டும் ஒரு முறை பந்து பவுண்டரி அருகே வந்து நின்ற போது, வேகமாக பந்தை எடுக்க வந்த அவர், பந்தை காலால் தள்ளி பவுண்டரிக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார்.

கொட்டாவி விட்ட வீரர்கள்

யாசிர் ஹா மற்றும் ஷான் மசூத் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் ஆட்டத்தின் போது கொட்டாவி விடும் நிலையில் இருந்தனர். பாகிஸ்தான் அணி எந்த வகையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தை தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்தவில்லை.

அக்ரம் விளாசல்

அக்ரம் விளாசல்

இதைக் கண்ட இந்த போட்டிக்கான வர்ணனையாளரும், முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் நேரலையில் ஷஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா, ஷான் மசூத் ஆகியோரை விளாசித் தள்ளினார்.

கொட்டாவி விட்டுக் கொண்டு..

கொட்டாவி விட்டுக் கொண்டு..

பைன் லெக் திசையில் பீல்டிங் செய்யும் ஷஹீன் ஷா வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிறார். யாசிர் ஷா மற்றும் ஷான் மசூத் கிட்டத்தட்ட கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பிரச்சனை என்றார் அக்ரம்.

கவனிக்க வேண்டும்

மேலும், அவர்கள் பந்தை கவனிக்க வேண்டும். எத்தனை அனுபவமற்ற வீரராக இருந்தாலும் புதிய பேட்ஸ்மேன் வரும் போது பவுண்டரிக்கு முன் 5 முதல் 10 அடி வரை முன்னேறி வர வேண்டும். பவுண்டரியில் நிற்கக் கூடாது என்று ஷஹீன் ஷாவின் பீல்டிங் குளறுபடியை பற்றி கூறினார் வாசிம் அக்ரம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australia vs Pakistan : Wasim Akram slams pakistan young players for fielding disaster
Story first published: Saturday, November 30, 2019, 18:13 [IST]
Other articles published on Nov 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X