
இந்திய அணி பயணம்
ஐபிஎல் 2020 சீசன் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இந்த போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இந்த வாரத்தில் இந்திய அணியினர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக தங்களது பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

டிசம்பர் 17ல் டெஸ்ட் தொடர்
அங்கு சென்று தங்களது இரு வார குவாரன்டைனை முடித்துக் கொண்டு, வரும் 27ம் தேதி ஒருநாள் போட்டித் தொடரிலும் அடுத்ததாக டி20 தொடரிலும் டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டித் தொடரிலும் இந்திய அணியினர் விளையாடவுள்ளனர். முதல் டெஸ்ட் தொடர் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்திய திரும்பும் விராட்
அதில் மட்டும் விளையாடவுள்ள கேப்டன் கோலி, அடுத்ததாக தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐயும் கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய எளிதில் வெல்லும்
இந்நிலையில் விராட் கோலி இல்லாத டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வெற்றி கொண்டு விடும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். விராட் கோலி சரியான முடிவை தான் எடுத்துள்ளார் என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாகன் ஆனால் அவரது முடிவு ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.