For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசத்தல் பவுலிங்.. சொதப்பல் பேட்டிங்.. 157 ரன்களில் சுருண்ட நியூசி. 86 ரன்களில் ஆஸி. சூப்பர் வெற்றி

லார்ட்ஸ்: உலக கோப்பையில் நியூசிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது ஆஸ்திரேலியா.

உலக கோப்பை கிரிக்கெட் லார்ட்சில் நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும் களமிறங்கினர். ஸ்கோர் 15 ரன்களை கடந்த போது கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

5 விக். காலி

5 விக். காலி

நியூசி.யின் அற்புத பந்துவீச்சில் ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 150 ரன்களையாவது எட்டுமா என்ற நிலை இருந்தது. ஆனால், ஓரளவு நிலைத்து நின்று ஆடிய கவாஜா 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு கைகோர்த்த கேரி 71 ரன்னில் அவுட்டானார்.

243 ரன்கள் குவிப்பு

243 ரன்கள் குவிப்பு

இறுதியில், 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழந்து 243 ரன்கள் எடுத்தது. 50வது ஓவரில் அசத்தல் பவுலிங்கில் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து, நியூசிலாந்துக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

நியூசிலாந்து சார்பில் குப்தில், நிகோலஸ் முதலாவதாக களமிறங்கினர். அதில் நிகோலஸ் 8 ரன்களும், குப்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விக். வீழ்ச்சி

விக். வீழ்ச்சி

ஆனால், ஒரு கட்டத்தில் கேன் வில்லியம்சன் 40 ரன்களில் ஆட்டமிழக்க நியூசி.யின் வீழ்ச்சி தொடங்கியது. அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30 ரன்களும், கிராண்ட் ஹோம் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லாதம் 14) ரன்களும், நீஷம் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து பின் வரிசை வீரர்களும் சொதப்பி தள்ளினர்.

வென்றது ஆஸி.

வென்றது ஆஸி.

முடிவில் நியூசிலாந்து 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க, 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Sunday, June 30, 2019, 3:21 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
Australia won by 86 run against New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X