For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பத்தில் அதிரடி…! அப்புறம் அப்படியே அலேக்கா... மல்லாக்க விழுந்த இலங்கை..!! ஆஸி. வெற்றி

லண்டன்: உலக கோப்பை ஆட்டத்தில், 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியாஅணி வென்றது. புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெஹண்டிராப் இடம் பிடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் பின்ச், 132 பந்தில் 15 பவுண்டரி, 5 சிக்சர் என 153 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம், உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த என்ற ஆஸி. வீரர் என்ற சாதனையை பின்ச் படைத்தார். ஸ்மித் அரைசதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

335 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா இருவரும் அபார தொடக்கத்தை அமைத்தனர். தொடக்கம் முதலே ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை பதம் பார்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள்

முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள்

இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்தனர். குசால் பெரேரா 52 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கருணரத்னேவுடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். திரிமன்னே 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கருணரத்னே காலி

கருணரத்னே காலி

சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக கொண்டிருந்த இலங்கை கேப்டன் கருணரத்னே, 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை 3 ரன்களில் தவறவிட்டார். இலங்கை அணியின் ஸ்கோர் 32 ஓவரில் 186 ரன்கள் என்ற இருந்தபோது கருண ரத்னே அவுட்டானார்.

87 ரன்களில் தோல்வி

87 ரன்களில் தோல்வி

அதன்பின்னர், தான் இலங்கையிடம் இருந்து ஆட்டம், ஆஸி.யின் பக்கம் கை மாறியது. இலங்கை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தனர். அனுபவ வீரர்கள் மேத்யூஸ் மற்றும் திசாரா பெரேராவும் சோபிக்கவில்லை. இதையடுத்து 46வது ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இதன் மூலம் ஆஸ்திரேலியா 8 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் வென்றார். ஒரு கட்டத்தில் அருமையாக ஆடிய இலங்கை, வெற்றி பெற்றுவிடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் முடிவு வேறு மாதிரி இருக்க அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Story first published: Saturday, June 15, 2019, 23:55 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
Australia won by 87 runs against srilanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X