For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திறமைக்கு சல்யூட்.. என்ன ஒரு உறுதி.. இந்திய அணிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் எழுதிய ஓபன் லெட்டர்!

சிட்னி: பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்ற விதம் பல தலைமுறைகளுக்கு நினைவு கூறப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாராட்டி உள்ளது.

கிரிக்கெட் உலகை சீட் நுனியில் உட்கார வைத்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவிற்கு வந்துள்ளது. பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது.

இப்போது என்ன சொல்லுவீங்க.. கெரியரே காலியாக போகிறது.. இந்திய அணியால் ஆஸி. எடுக்க போகும் பரபர முடிவு! இப்போது என்ன சொல்லுவீங்க.. கெரியரே காலியாக போகிறது.. இந்திய அணியால் ஆஸி. எடுக்க போகும் பரபர முடிவு!

தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாராட்டி உள்ளது.

கடிதம்

கடிதம்

இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எழுதியுள்ள கடித்ததில், முக்கியமான காலகட்டத்தில் உலகம் முழுக்க இருக்கும் பல மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் மிக சிறப்பான கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த உறுதுணையாக இருந்த இந்திய அணிக்கும், பிசிசிஐ அமைப்பிற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இப்படி ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த உறுதுணையாக இருந்த இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் எங்களது நன்றிகள். கடந்த 9 வாரங்களில் இந்திய - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருநாளை, டி 20, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் என்ற மிக நீண்ட தொடரை ஆடினார்கள்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை

பார்டர் கவாஸ்கர் கோப்பை

அதிலும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரலாற்றில் இதுதான் மிகவும் சிறப்பான தொடர். பல சிக்கல்கள், சவால்களுக்கு இடையில் நடந்த இந்த தொடரில் சிறப்பாக பங்குபெற்று உலகம் முழுக்க சர்வதேச விளையாட்டு போட்டியின் மிகப்பெரிய தூதுவர் தாங்கள்தான் என்பதை பிசிசிஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பவுலர்கள்

பவுலர்கள்

மிக சிறந்த பவுலர்களான பும்ரா முதல் கும்மின்ஸ் வரை, ரஹானே, ஸ்மித்தின் பேட்டிங் தொடங்கி சுப்மான் கில் , கேமரூன் கிரீனின் அறிமுகம் வரை இந்த தொடரில் எல்லாமும் சிறப்பாக அமைந்தது. பிசிசிஐ அமைப்பில் உள்ளவர்கள் இந்த தொடருக்காக செய்த்தாஹ் தியாகங்களை கண்டிப்பாக நாங்கள் மறக்க மாட்டோம்.

உறுதுணையாக இருந்தனர்

உறுதுணையாக இருந்தனர்

இந்த தொடர் நடக்க உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் வலியையையும், உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.இந்த தொடர் வெற்றி பல தலைமுறைகளுக்கு பேசப்படும், என்று இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாராட்டி உள்ளது.

Story first published: Wednesday, January 20, 2021, 16:25 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Australia cricket board writes an open letter to India after the Border Gavaskar Trophy loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X