For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்

பெங்களூரு : இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதுவரை இந்தியாவில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரி விளையாடவில்லை என்றாலும் 2018 ஆம் ஆண்டு இந்திய ஏ அணி எதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அலெக்ஸ் கேரி விளையாடி இருக்கிறார்.

அதில் தமக்கு கிடைத்த அனுபவம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த டெஸ்ட் தொடரையும் தோல்வியை தழுவியது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் சொந்த மண்ணில் தொடர்ந்து 15 டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதற்கு காரணம் வெறும் சுழற் பங்கு வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் மட்டும் கிடையாது.

இது ரொம்ப தப்புங்க.. பொங்கி எழுந்த பிராட், பில்லிங்ஸ்.. ஒரே டிவிட் மூலம் வாயை அடைத்த அலெக்ஸ் ஹெல்ஸ்இது ரொம்ப தப்புங்க.. பொங்கி எழுந்த பிராட், பில்லிங்ஸ்.. ஒரே டிவிட் மூலம் வாயை அடைத்த அலெக்ஸ் ஹெல்ஸ்

ரிவர்ஸ் ஸிவிங்

ரிவர்ஸ் ஸிவிங்

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்களும் திறமை வாய்ந்து இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் நாங்கள் விளையாட செல்லும் போது இதே போல் தான் சுழற் பந்து வீச்சு குறித்து நிறைய பேசப்பட்டது. ஆனால் அங்கு வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். பந்து அங்கு நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது.இதேபோல் நான் இந்தியாவில் ஏற்கனவே ஒரு முறை டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறேன்.

சிராஜ் தந்த அதிர்ச்சி

சிராஜ் தந்த அதிர்ச்சி

2018 ஆம் ஆண்டு இந்திய ஏ அணியை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக நான்கு நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறேன். அப்போது இதே போல் தான் சுழல் பந்துவீச்சு குறித்து பேசப்பட்டது. ஆனால் முகமது சிராஜ் அந்த ஆட்டத்தில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நாங்கள் அப்போது சுழற் பந்துவீச்சு மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் வைத்து விக்கெட்களை வீழ்த்துவார்கள் என்பதை நாங்கள் மறந்து விட்டோம்.

எதற்கும் தயாராக இருங்க

எதற்கும் தயாராக இருங்க

இந்தியாவில் உள்ள விக்கெட்டுகள் நிச்சயம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு உதவும். இதேபோன்று கடந்த ஆண்டு நாங்கள் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அங்கு காலேவில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டுக்குமே வேறு வேறு ஆடுகளம் அமைக்கப்பட்டது. எனவே என்னுடைய அறிவுரை எல்லாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆடுகளங்களில் விளையாடும் போது எப்படி வேண்டுமானாலும் அது செயல்படும். சுழற் பந்துவீச்சுக்கும் வேகபந்துவீச்சுக்கும் ஏற்ற வகையில் தான் ஆடுகளம் இருக்கும். அதை போல் பேட்டிங் இருக்கு சாதகமாகவும் இந்திய ஆடு களங்கள் இருக்கும்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

எங்களுக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் இருப்பது நிச்சயம் சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் குறித்து அவர்களுடைய அனுபவத்தை நாங்கள் கேட்க உள்ளோம். அதற்காக ஒரு ஆலோசனை கூட்டத்தை அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாரம் முழுவதும் இன்னும் நிறைய சுழற் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள இருக்கிறோம். இதுவரை நாங்கள் எப்படி சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள போகிறோம் என்பது குறித்து இந்த திட்டத்தையும் வகுக்க வில்லை.

சூழல் மாறும்

சூழல் மாறும்

என்னை கேட்டால் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட திறமையை வைத்து விளையாட வேண்டும். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடக்கூடியவர். ரெண்சா தனது உயரத்தை பயன்படுத்தி பந்து எங்கே வருகிறதோ அதனை அடிப்பார். நான் நிறைய ஸ்வீப் ஷாட் ஆடி நன்களை சேர்ப்பேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் எப்போதும் நாம் ஜொலிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில சமயம் விக்கெட்டுகள் விழும். சில சமயம் நமக்கு சரிவு கிடைக்கும். இந்த சூழ்நிலைகள் எல்லாம் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து வெற்றி கிட்டும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சாதகமாக முடிவு இருக்கும் என்று அலெக்ஸ் கேரி கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 18:33 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Australian batsman Alex carrey gives caution about indian bowlers reverse swing
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X