For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன்பா! உன் டீமுக்கு ஆடுறியா? எதிர் டீமுக்கு ஆடுறியா?.. ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்த ஆஸி. பௌலர்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஒரு பந்துவீச்சாளர் ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

நோ பால், வைடு, பவுண்டரி என ஒரு சரியான பந்தை வீசி முடிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் திணறினார். ஒரு சரியான பந்தை வீசி முடிப்பதற்குள் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார் அவர்.

ரைலே மெரிடித் வீசிய பந்து

பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் ஹரிகேன்ஸ் அணி சார்பில் முதல் ஓவரை வீசினார் ரைலே மெரிடித். முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் வீசினார்.

6 ரன்கள் கிடைத்தது

6 ரன்கள் கிடைத்தது

அடுத்த பந்தை நோ பால் ஆக வீசினார். அந்த பந்து விக்கெட் கீப்பரிடம் இருந்து விலகிச் சென்று பவுண்டரியை தொட்டது. இதனால் நோ பாலுக்கு ஒரு ரன் + வைடு + பவுண்டரி என 6 ரன்கள் மெல்போர்ன் அணிக்கு கிடைத்தது.

அடுத்து 16 ரன்கள்

அடுத்து 16 ரன்கள்

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மீண்டும் வீசினார் ரைலே. இதுவும் நோ பால். இந்த பந்தை பேட்ஸ்மேன் ஃபோருக்கு விரட்டினார். மீண்டும் மூன்றாவது பந்தை வீசினார். இதுவும் நோ பால் + ஃபோர். இத்தோடு 16 ரன்கள் ஆனது.

ஒரே பந்தில் 17 ரன்கள்

ஒரே பந்தில் 17 ரன்கள்

இதன் பின் மீண்டும் ரைலே வீசிய பந்து சரியான பந்தாக அமைந்தது. அந்த பந்தில் பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை வீசி முடிப்பதற்குள் மொத்தமாக 17 ரன்கள் எடுத்தது மெல்போர்ன் அணி. ரைலே யார் டீமுக்கு ஆடுகிறார் என குழப்பம் வரும் அளவுக்கு வைத்து செய்தார்.

ஆனாலும் வெற்றி

ஆனாலும் வெற்றி

அந்த முதல் ஓவரில் மட்டும் ஹரிகேன்ஸ் அணி 23 ரன்கள் கொடுத்தது. எனினும், இந்த போட்டியில் ஹரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 184 ரன்கள் எடுத்தது. அடுத்து மெல்போர்ன் அணி ஆடியது.

துவக்கம் கிடைத்தும் தோல்வி

துவக்கம் கிடைத்தும் தோல்வி

அதன் முதல் ஓவரில் தான் ரைலேவின் சொதப்பலால் 23 ரன்கள் கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மெல்போர்ன் அணி 167 ரன்களில் ஆல்-அவுட் ஆகி 16 ரன்களில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, February 9, 2019, 19:28 [IST]
Other articles published on Feb 9, 2019
English summary
Australian bowler conceded 17 runs to complete a single legal ball in BBL 2018-19.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X