For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் ஷாக்

Recommended Video

மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு?

குயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் தலையை நோக்கி பந்தை அடித்தார் பேட்ஸ்மேன்.

பவுலர் கையை வைத்து தடுத்து தன் தலையை காப்பாற்றிக் கொண்டார். நூலிழையில் உயிர் தப்பினார் என்று தான் சொல்ல வேண்டும்.

பந்து தலையில் பட்டு இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அந்த காட்சியை இணையத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டார்கள்.

என்ன போட்டி?

என்ன போட்டி?

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து அணிகள் இடையே ஆன ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் மிக்கி எட்வர்ட்ஸ் பந்து வீசிய போது தான் அந்த சம்பவம் நடந்தது.

அதிரடி சேஸிங்

அதிரடி சேஸிங்

அந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூ சவுத் வேல்ஸ் அணி 305 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து சேஸிங் செய்ய வந்த குயின்ஸ்லாந்து அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.

அந்த ஓவர்

அந்த ஓவர்

16.4 ஓவர்களில் 130 ரன்கள் குவித்து இருந்தது அந்த அணி. அந்த அணியின் 17வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசினார் மிக்கி எட்வர்ட்ஸ். பந்தை சந்தித்தார் குயின்ஸ்லாந்து பேட்ஸ்மேன் சாமுவேல்.

தலைக்கு வந்த பந்து

தலைக்கு வந்த பந்து

ஐந்தாவது பந்தை ஏறி வந்து அடித்தார் சாமுவேல். பந்து நேராக மிக்கி எட்வர்ட்ஸ் தலையை நோக்கி வந்தது. அதை உணர்ந்த அவர் கையை வைத்து தன் தலையை மறைத்தார்.

கையில் அடி

பந்து அவரது கையை பலமாக தாக்கிவிட்டு சென்றது. கீழே விழுந்த அவர், உடனடியாக எழுந்து நின்றதை அடுத்து, பெரிய காயம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். எனினும், அவர் கையில் பலமாக அடிபட்டு இருந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது. அதன் கீழே பதிவிட்டுள்ள ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Story first published: Sunday, September 22, 2019, 14:43 [IST]
Other articles published on Sep 22, 2019
English summary
Australian bowler escaped from a vicious blow by batsman straight to his head in the Marsh Cup. Fans feels it is terrific.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X