For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் என்ன பண்ணாரு தெரியுமா? சர்ச்சை கிளப்பிய இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த ஆஸி. கேப்டன்!

Recommended Video

வார்னர் என்ன பண்ணாரு தெரியுமா? | Captain Tim Paine shuts down Ben Stokes claims on Warner

சிட்னி : ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீது புகார் சொல்லி இருக்கிறார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வார்னர் தன்னை சீண்டிக் கொண்டே இருந்தது தான், தனக்கு ஊக்கம் அளித்து தன் அணியை வெற்றி பெற வைக்க உதவியது எனக் கூறி சர்ச்சையை துவக்கி வைத்தார் பென் ஸ்டோக்ஸ்.

இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதிலடி கொடுத்து இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கி விட்டுள்ளார்.

சர்ச்சை நாயகன் வார்னர்

சர்ச்சை நாயகன் வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் துவக்க காலத்தில் இருந்தே சர்ச்சையான வீரர் தான். டெஸ்ட் போட்டிகளின் போது ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் அவர் எதிரணி வீரர்களை சீண்டுவார்.

ஓராண்டு தடை

ஓராண்டு தடை

அது எல்லை மீறி, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பெரும் சீண்டல்கள் - மோதல்கள் நடந்தன. அதன் முடிவில் டேவிட் வார்னர் பந்து சேத விவாகரத்தில் சிக்கி, ஓராண்டு தடை செய்யப்பட்டார்.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

தடை முடிந்து உலகக்கோப்பை தொடரில் ஆடிய அவர், அடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் ஆட வந்தார். முதல் தொடராக கடினமான ஆஷஸ் தொடரில் பங்கேற்றார். தடைக்கு பின் வார்னர் அமைதியாக மாறிவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆஷஸ் தொடரில் அவர் எந்த சர்ச்சைகளிலும் ஈடுபடவில்லை.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

ஆனால், ஆஷஸ் தொடரில் வார்னர் கடுமையாக பார்ம் அவுட் ஆனார். அது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகவும் இருந்தது. கடைசி வரை அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றி

புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றி

இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் கிரிக்கெட் வரலாற்றின் புகழ்பெற்ற வெற்றி ஒன்றை பெற்றுத் தந்தார் பென் ஸ்டோக்ஸ். முதல் இன்னிங்க்ஸில் வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து, அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 359 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்தப் போட்டியில், இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து தடுமாறி வந்தது. கடைசி நேரத்தில் பின்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

பென் ஸ்டோக்ஸ் புகார்

பென் ஸ்டோக்ஸ் புகார்

தற்போது தன் கிரிக்கெட் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து புத்தகம் எழுதி இருக்கும் பென் ஸ்டோக்ஸ், அது பற்றிய நிகழ்ச்சியில், அந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் தன்னை இடைவிடாது சீண்டிக் கொண்டு இருந்ததாகவும், அது தான் தன்னை ஊக்கப்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

டிம் பெய்ன் பதிலடி

டிம் பெய்ன் பதிலடி

பென் ஸ்டோக்ஸ் புகார், வார்னரை மீண்டும் சர்ச்சை நாயகனாக சித்தரித்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன். அவர் கூறுகையில், வார்னர் அந்த டெஸ்ட் போட்டியில் என் அருகே தான் நின்று இருந்தார். அவர் சீண்டும் வகையிலோ, திட்டும் வகையிலோ எதுவும் பேசவில்லை என்றார்.

புத்தக விற்பனைக்கு வழி

புத்தக விற்பனைக்கு வழி

இங்கிலாந்தில் புத்தக விற்பனைக்கு வார்னர் பெயரை பயன்படுத்துவது ஒரு வழியாக மாறி உள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் எனக் கூறி பென் ஸ்டோக்ஸ்-க்கு நோஸ் கட் கொடுத்துள்ளார் டிம் பெய்ன்.

வார்னர் சிறப்பாக கையாண்டார்

வார்னர் சிறப்பாக கையாண்டார்

ஸ்டோக்ஸ் கூறுகையில், வார்னர் அந்த தொடரில் சரியாக ரன் குவிக்காததால், மீண்டும் தனக்குள் இருந்த காளையை வெளிக்காட்டி தன்னை சீண்டி இருக்கலாம் என கூறி இருந்தார். அதை மறுத்து கருத்து தெரிவித்த டிம் பெய்ன், அவர் ரன் குவிக்காமல் அழுத்தத்தில் இருந்த போதும் தன்னை சிறப்பாக கையாண்டார் என்று கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, November 17, 2019, 16:36 [IST]
Other articles published on Nov 17, 2019
English summary
Australian captain Tim Paine shuts down Ben Stokes claims on Warner during Ashes third test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X