மான்கட் - செம காமெடி.. இங்கிலாந்தை பங்கம் செய்த ஆஸி. வீராங்கனை.. தீப்தி சர்மாவை புகழ்ந்து தள்ளினார்

மெல்போர்ன் : சர்வதேச கிரிக்கெட்டில் மான்கட் விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி கடுமையாக பங்கம் செய்து கலாய்த்துள்ளார்.

Recommended Video

Mankad Wicket குறித்து Ellyse Perry செம கலாய் Reply!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை மான்கட் செய்து ஆட்டமிழக்க வைத்தார்.

இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது.

பாகிஸ்தானை முந்திய இந்தியா.. டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்! பாகிஸ்தானை முந்திய இந்தியா.. டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்த நிலையில் மான்கட் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணியினர் மான்கட் செய்துதான் இந்தியா வெற்றி பெற வேண்டுமா? இது போன்ற ஆட்டம் இழக்க செய்ததற்கு இந்திய அணி வெட்கப்பட வேண்டும் என பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் ஐசிசி விதிக்குட்பட்டு தான் மான்கட் ரன் அவுட் செய்யப்பட்டதாக பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இங்கிலாந்து மீது விமர்சனம்

இங்கிலாந்து மீது விமர்சனம்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி மான்கட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் மான்கட் முறை சரியானது அல்ல. அதனை யாரும் செய்ய வேண்டாம். இப்படி நீங்கள் மான்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க நினைத்தால் இங்கிலாந்திடம் மட்டும் செய்யுங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும் தீப்தி சர்மா குறித்தும் அவர் பாராட்டி இருக்கிறார்.

தீப்திக்கு பாராட்டு

தீப்திக்கு பாராட்டு

அப்போது பேசிய அவர் தீப்தியும் தாமும் ஒரே அணிக்காக விளையாடினோம். அப்போது நான் அவருடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். திப்தி சர்மா பழகுவதற்கு இனிமையானவர். எப்போதும் அமைதியாக தான் பேசுவார். ஆனால் களத்தில் தீப்தி ஷர்மா சிறப்பாக செயல்படுவார். அவருக்கு வெள்ளை நிறத்தை கண்டால் பிடிக்காது என நினைக்கிறேன். அதனால் தான் அப்படி ஆட்டமிழக்க செய்து இருக்கிறார் என்று பதில் அளித்துள்ளார்.

மொயின் அலி கோரிக்கை

மொயின் அலி கோரிக்கை

பொதுவாக இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். அதனால்தான் மான்கட் விவகாரத்தில் இங்கிலாந்தை பங்கமாக எலிஸ் பெர்ரி கலாய்த்து உள்ளார். இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் மொயின் அலி, மான்கட் முறையை ஐசிசி அங்கீகரித்து இருப்பது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மான்கட் முறையை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australian cricketer Ellyse Perry make fun of england in mankad controversy
Story first published: Thursday, September 29, 2022, 17:56 [IST]
Other articles published on Sep 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X