For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்லோயர் பந்துகள் தேவையா? லென்த் ரொம்ப முக்கியம்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு பிரெட் லீ சொன்ன 4 அட்வைஸ்!

டெல்லி: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிகளவில் மித வேகத்தில் பந்துகளை வீசக் கூடாது என்றும், உள்ளூர் போட்டிகளில் அதிகமாக பங்கேற்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரெட் லீ அறிவுறித்தியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தொடக்கத்தில் சில போட்டிகளில் திணறினாலும், பின்னர் சூழலை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பவர் ப்ளே ஓவர்களானாலும் சரி, டெத் ஓவர்களானாலும் சரி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

என்.சி.ஏவின் கவனக்குறைவு.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஃபிட்னஸ் பிரச்சினை.. சாபா கரீம் கடும் விளாசல்! என்.சி.ஏவின் கவனக்குறைவு.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஃபிட்னஸ் பிரச்சினை.. சாபா கரீம் கடும் விளாசல்!

பிரெட் லீ பாராட்டு

பிரெட் லீ பாராட்டு

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதோடு நன்றாக ஸ்விங் செய்வதால், பும்ராவுக்கு பின் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இதனிடையே அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடுகளை ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியுள்ளார். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அர்ஷ்தீப் சிங் களமிறங்க உள்ளார். இதனிடையே அர்ஷ்தீப் சிங்கை இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா பாதுகாக்க வேண்டும் என்று பிரெட் லீ ஆலோசனை கூறியுள்ளார்.

பிரெட் லீ அறிவுரை

பிரெட் லீ அறிவுரை

இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில், சில நேரங்களில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது அவர்களை கொண்டு எவ்வாறு திட்டமிடுவது என்று அணி நிர்வாகிகள் திணறுவார்கள். அதேபோல் இளம் வீரர்களுக்கு அறிவுரை கூற டிவி, வர்ணனையாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், ரசிகர்கள் என்று கூட்டமே காத்திருக்கும். அதுவே சில நேரங்களில் இளைஞர்களுக்கு பிரச்சினையாக இருக்கும்.இதனால் அர்ஷ்தீப் சிங்கிற்கு அதிக அறிவுரைகளை பின்பற்ற விடாமல், ராகுல் டிராவிட், ரோஹித் ஷர்மா இருவரும் பாதுகாக்க வேண்டும். அதேபோல் அர்ஷ்தீப் சிங்கை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதால், சில உதவிகள் செய்ய விரும்புகிறேன்.

அறிவுரையை ஏற்காதே

அறிவுரையை ஏற்காதே

அதில் முதல் அறிவுரை என்னவென்றால், வேகப்பந்துவீச்சாளர் என்றால் நல்ல உடல்கட்டுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. ஆனால் மனதளவில் உறுதியாக இருந்தால் போதுமானது. உடல் பயிற்சி கூடத்தில் அதிக பயிற்சியில் ஈடுபட தேவையில்லை. இப்போது உள்ள உடற்கட்டை பாதுகாத்தாலே போதுமானது. இரண்டாவது சமூக வலைதளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உள்ளூர் போட்டிகளில் கவனம்

உள்ளூர் போட்டிகளில் கவனம்

யார் என்ன எழுதினாலும், அதனை படிக்காமல் கடந்து செல்வதே சரியானது. ஒருவேளை சமூக வலைதளங்களால் அழுத்தம் அதிகமானால், அதனை மூடிவைக்க தயக்கம் காட்ட கூடாது. அதேபோல் உள்ளூர் தொடர்களில் அதிகமாக பங்கேற்க வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் போது, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இருந்தால், நம்மால் அதிகமாக சோதனை செய்து பார்க்க முடியும்.

மித வேகம் கூடாது

மித வேகம் கூடாது

அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் என்றால் மணிக்கு 150கிமி வேகத்தில் வீச வேண்டும் என்பது அல்ல. வேகம் தேவை தான். ஆனால் பந்துவீச்சில் லைன் மற்றும் லென்த் இன்னும் முக்கியமானது. ஏனென்றால் வேகமாக வீசும் போது பந்துவீச்சாளர்கள் தங்களின் ரிதத்தை இழந்துவிடுவார்கள். அதேபோல் மித வேகத்திலும் அதிக பந்துகளை வீசக் கூடாது. ஒரே வேகத்தில் நிலையாக வீசுவதற்கு பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

Story first published: Monday, November 28, 2022, 19:43 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
Australia legend Fred Lee has advised Indian fast bowler Arshdeep Singh not to bowl too many medium pace balls and should participate more in domestic matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X