For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னையும் சீண்டினாங்க... நான் வாயே திறக்கலை... தாக்கூர் பரபர!

பிரிஸ்பேன் : கடந்த போட்டியில் பௌலர் ஆர் அஸ்வினை சீண்டிய கேப்டன் டிம் பெய்ன் இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் க்ரெக் சாப்பல் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை சீண்டியதாகவும் ஆனால் தான் அதற்கு பதிலளிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி 3 நாட்கள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளன. முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது.

உயர்ந்த அணியின் ஸ்கோர்

உயர்ந்த அணியின் ஸ்கோர்

இந்தியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரைசதங்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 123 ரன்களை குவித்தனர்.

சீண்டல்களை எதிர்கொண்ட தாக்கூர்

சீண்டல்களை எதிர்கொண்ட தாக்கூர்

கடந்த போட்டியில் பௌலர் அஸ்வினை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் சீண்டிய விவகாரம் பெரிய அளவில் கண்டனங்களை எழுப்பியது. இந்நிலையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது போட்டியிலும் இத்தகைய சீண்டல்களை தான் சந்தித்ததாக பௌலர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் கவனம்

விளையாட்டில் கவனம்

ஆனால் அவர்களின் இத்தகைய சீண்டல்களுக்கு தான் எந்தவித ரிப்ளையும் கொடுக்கவில்லை என்றும் ஒன்றிரண்டு முறை பதில் கொடுக்க முயன்றதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்ந்து தன்னை சீண்ட முயன்றதாகவும் ஆனால் அதை தான் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

Story first published: Sunday, January 17, 2021, 17:48 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
They were trying to sledge me, I did not hear, I just played on -Thakur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X