For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட.. தீபாவளி நாளில் ஆச்சரியம் அளித்த ஆஸி. வீரர்கள்.. லைக்ஸ்-ஐ தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்!

சிட்னி : ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் மறக்காமல் தீபாவளி வாழ்த்து கூறி அசத்தி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடிகாலையில் ஆஸ்திரேலிய வீரர்கள், முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர் என பலர் தீபாவளி வாழ்த்து சொல்லி அசத்தினர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்

கிரிக்கெட் உலகில் அசத்தலாக கிரிக்கெட் விளையாடுவதிலும், அதிக பணம் ஈட்டுவதிலும் இரண்டு முன்னணி நாடுகள் எது என்றால் அது இந்தியா, ஆஸ்திரேலியா தான். இரண்டு நாடுகளிலும் நாட்டின் பெரும்பாலான மக்கள் தொகையினர் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர்.

தீபாவளி வாழ்த்து

இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாளில் இந்தியாவை மறக்காமல் தீபாவளி வாழ்த்து கூறி இருக்கின்றனர் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டாம் மூடி.

இந்திய தொடர்பு

ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியிலும், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். டாம் மூடி சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். மைக்கேல் கிளார்க் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொடர்ந்து வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

வாழ்த்து செய்தி

ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்டுள்ள வாழ்த்தில் "என் இந்திய நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்" என கூறி இருக்கிறார். வார்னர் தன் பதிவில் "அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என கூறி உள்ளார்.

கிறிஸ் கெயில் வாழ்த்து

இவர்களின் பதிவிற்கு லட்சகணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்திய ரசிகர்கள் இவர்கள் இருவரின் பதிவையும் பகிர்ந்து வருகின்றனர். கிறிஸ் கெயிலும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, October 27, 2019, 14:38 [IST]
Other articles published on Oct 27, 2019
English summary
Australian players wished Happy Diwali to Indian fans. Steve Smith, David Warner also shares their wishes in Social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X