For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் டெஸ்ட்: “இங்கிலாந்து அணிக்கு தர்ம அடி”.. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஓவல்: ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்துக்கு தர்ம அடி கொடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்..!! மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி ஆஸி.சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்..!! மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி ஆஸி.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக லாப்ஷாங்னே 103 ரன்களும், ஸ்மித் 93 ரன்களும் விளாசினர்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே சொதப்பினர். இதனால் 237 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸில் ஆடியது. அப்போதும் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

 பட்லரின் போராட்டம்

பட்லரின் போராட்டம்

468 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஹசீப் ஹமீது டக் அவுட் ஆனார். ரோரி பர்ன்ஸ் 34 ரன்களும் டேவிட் மாலன் 20 ரன்களும் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர். இதன் பின்னர் ஜோ ரூட் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

தடுமாறி வந்த இங்கிலாந்து அணியை காப்பாற்றி சமன் செய்துவிட வேண்டும் என ஜாஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி போராடியது. ஆனால் அவர்களால் நீண்ட நேரம் நீடிக்க முடியாததால் அந்த அணி 192 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2 - 0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.,

Story first published: Monday, December 20, 2021, 20:33 [IST]
Other articles published on Dec 20, 2021
English summary
Australian team beats England by 275 runs to win second Ashes Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X