For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட இது லிஸ்டலையே இல்லையே.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த அஸி, அணி.. டெஸ்ட் தொடருக்காக ஸ்பெஷல் யுக்தி!

மும்பை: இந்திய அணியின் பவுலர்கள் சொந்த மண்ணில் அசுர பலத்தில் இருப்பார்கள் என்பதால் அவர்களை சமாளிக்க, ஆஸ்திரேலிய அணி அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துடனான டி20 தொடரில் மோதி வருகிறது. இது முடிந்த பின்னர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தான் இந்தியாவின் சீனியர் வீரர்கள் டி20 தொடர்களில் விளையாடாமல் ஓய்வில் உள்ளனர்.

சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்! சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் அல்லது சமன் செய்ய வேண்டும். இந்தியா வெல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இரு அணிகளும் மோதிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியே தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது.

இந்திய அணியின் பலம்

இந்திய அணியின் பலம்

ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது அஸ்வின் - அக்‌ஷர் - ஜடேஜா போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் தான். அதுவும் இந்திய களங்களில் அவர்களை எதிர்ப்பது சாதாரணம் அல்ல. இப்படி இருக்கையில் இந்த முறை எப்படியாவது கம்பேக் தர வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஸ்பெஷல் ஏற்பாடு

ஸ்பெஷல் ஏற்பாடு

இந்நிலையில் இந்திய அணியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி ஸ்பெஷல் ஏற்பாட்டை செய்துள்ளது. ஓவலில் உள்ள மைதானத்தில் கொஞ்சம் கூட புற்கள் இல்லாமல் மிகவும் வரண்டு போன பிட்ச்-ஐ உருவாக்கியுள்ளது. அதில் விரிசல்கள் உள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவில் இருப்பதை போன்றே பிட்ச்-ஐ உருவாக்கி அதில் பேட்டிங் பயிற்சி செய்து வருகின்றனர். அதுவும் இந்தியாவை விட மிகவும் ஸ்பின் ஆகக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளனர்.

பெங்களூருவிலும் ஏற்பாடு

பெங்களூருவிலும் ஏற்பாடு

இதே போல பெங்களூருவில் மிக அதிகமாக டேர்ன் ஆகக்கூடிய வகையில் பிட்ச்-ஐ ஏற்படுத்திக்கொடுக்க ஆஸ்திரேலிய வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதியன்று பெங்களூருவுக்கு வரும் அந்த அணிக்கு பயிற்சி போட்டிகள் எதுவும் கிடையாது. ஆனால் 5 நாட்கள் பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளன. அதற்காக தான் பிசிசிஐ-யிடம் கேட்டு இதுபோன்ற பிட்ச்-கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஏமாந்துப்போன பாகிஸ்தான்

ஏமாந்துப்போன பாகிஸ்தான்

இதே யுக்தியை தான் பாகிஸ்தான் தொடரிலும் பயன்படுத்தினர். பாகிஸ்தானில் இருப்பதை போன்றே பிட்ச்-ஐ தயார் செய்து பயிற்சி செய்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. ஆனால் அந்த யுக்தி இந்திய அணியிடம் பழிக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 30, 2023, 19:38 [IST]
Other articles published on Jan 30, 2023
English summary
Australian Team gives a Special surprise to Team India ahead of 4 match test series, practice on special pitch in sydney to tackle spin attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X