For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. அணி குறித்த விவரங்களை லீக் செய்த ஓட்டை வாய் வீராங்கனை.. ஓராண்டு சஸ்பெண்ட்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீராங்கனை எமிலி ஸ்மித் தன்னுடைய அணி குறித்த விவரங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் போர்டு, அவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓராண்டு தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு கட்டுப்பாட்டை மீறி எமிலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணி குறித்த விவரங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்டிங் செய்பவர்களுக்கு அவர் வழிவகை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் கிரிக்கெட் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த தடை தற்போது 9 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சில முக்கிய போட்டிகளில் விளையாட எமிலிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 சிறப்பான விக்கெட் கீப்பர்

சிறப்பான விக்கெட் கீப்பர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் எமிலி ஸ்மித். 24 வயதான எமிலி, மகளிர் அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர். சர்வதேச அளவில் கவனம் பெற்றவர்.

 50 ஓவர் தேசிய கிரிக்கெட் லீக்

50 ஓவர் தேசிய கிரிக்கெட் லீக்

ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராக எமிலி ஸ்மித் களமிறங்கினார். இதையடுத்து 50 ஓவர் தேசிய கிரிக்கெட் லீக் தொடரிலும் இந்த அணி பங்கேற்க உள்ளது.

 இன்ஸ்டாகிராமில் வெளியீடு

இன்ஸ்டாகிராமில் வெளியீடு

மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் ஒரு போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிராக தன்னுடைய ஹரிக்கேன்ஸ் அணி களமிறங்குவதற்கு முன்பாகவே அணி குறித்த விவரங்களை எமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

 எமிலிக்கு ஓராண்டு தடை

எமிலிக்கு ஓராண்டு தடை

எமிலியின் இந்த நடவடிக்கை ஊழல் தடுப்பு விதிகளின்படி குற்றம் என்று தெரிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் போர்டு, இந்த நடவடிக்கை பெட்டிங் செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எமிலிக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 முக்கிய போட்டிகளில் விளையாடுவார்

முக்கிய போட்டிகளில் விளையாடுவார்

இதனிடையே, எமிலிக்கு எதிரான இந்த தடையை 9 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அணியின் முக்கிய சில போட்டிகளில் விளையாட எமிலி அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 19, 2019, 11:08 [IST]
Other articles published on Nov 19, 2019
English summary
Australian woman cricketer emily smith bans for one year
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X