For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சுத்தி சுத்தி வந்தீங்க".. ஒரே முடிவில் ஆஸி. வீரர்களை திணறடித்த ரஹானே.. கேப்டனின் ஸ்மார்ட் மூவ்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரஹானே அனுப்பிய பேட்டிங் ஆர்டர் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. எப்படியாவது விக்கெட்டை காப்பாற்றி டிரா செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் இன்று காலை வேண்டிய நிலையில் தற்போது இந்திய அணி வெற்றியை நோக்கி அதிரடியாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது? அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?

சுப்மான் கில், புஜாரா, பண்ட் அதிரடியால் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது வரை 3 விக்கெட்டை இழந்து இந்திய அணி 218 ரன்கள் எடுத்துள்ளது.

எத்தனை

எத்தனை

இன்னும் 25 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி 110 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டி டிரா ஆகவோ அல்லது இந்திய அணி வெற்றிபெறவோ அதிக வாய்ப்பு உள்ளது.

எப்படி

எப்படி

இப்படிப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரஹானே அனுப்பிய பேட்டிங் ஆர்டர் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து இருக்கிறது. ரஹானே அவுட் ஆன பின் இன்று மயங்க் அகர்வால் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக பண்ட் களமிறங்கினார்.

ஏன்

ஏன்

புஜாரா வலதுகை பேட்ஸ்மேன், பண்ட் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் பண்ட் பேட்டிங் ஆர்டரில் முன்பே களமிறங்கினார். மைதானத்தில் இடது வலது காம்பினேஷன் இருக்க வேண்டும் என்பதால் பண்டை முன்பே களமிறக்கி உள்ளார் ரஹானே. இது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.

உதவியது

உதவியது

இடது வலது காம்பினேஷன் ஆடியதால் ஆஸ்திரேலிய பவுலர்கள் மாறி மாறி பவுலிங் செய்தனர். இன்னொரு பக்கம் பீல்டர்கள் ஒவ்வொருமுறையும் 90 யார்டு மைதானத்தில் மாறி மாறி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சோர்ந்து போக தொடங்கினார்கள். பவுலர்களும் மாற்றி மாற்றி பவுலிங் செய்து சோர்ந்து போனார்கள். மைதானத்தில் சுத்தி சுத்தி பீல்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வந்துள்ளனர்.

சோர்வு

சோர்வு

இது நான்காவது நாளின் கடைசி செஷன் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் பேட்ஸ்மேன்கள் மாறும் போது பீல்டிங்கும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்த திட்டம் பெரிய அளவில் சோர்விற்கு உள்ளாக்கி உள்ளது.

Story first published: Tuesday, January 19, 2021, 18:14 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Australians become so tired after the left-right combination of Pant - Pujara suffers them more.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X