For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.. நீங்கள்தான் ஜாம்பவானா?.. இந்திய மேட்சில் ஷாக் சம்பவம்!

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் இன்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் இறங்கி நிதானமாக ஆடி வருகிறது. முதல் 15 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர் முகமது சிராஜ் தற்போது பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரின் அப்பா கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார். இவர்தான் முகமது சிராஜ் கிரிக்கெட் விளையாட வறுமையிலும் ஊக்குவித்தார்.

வறுமை

வறுமை

வறுமையான பின்னணி இருந்த போதும் கூட முகமது சிராஜ் கிரிக்கெட் விளையாட அவரின் அப்பாதான் அனுமதித்தார். இந்த நிலையில் முகமது சிராஜ் இந்திய கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அவரின் அப்பா இயற்கை எய்தி உள்ளார்.

தொடர்

தொடர்

ஆனாலும் கிரிக்கெட் தொடர் முக்கியம் என்பதால் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்து இறுதி சடங்கிற்கு கூட இந்தியா வரவில்லை. இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் இன்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் நவ்தீப் சைனி இடம் பிடித்துள்ளார்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

இந்த போட்டியை ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் கில்கிறிஸ்ட் மற்றும் சிலர் ஆங்கிலத்தில் வர்ணனை செய்து வருகிறார்கள். இன்று வர்ணனையில் நவ்தீப் சைனியின் அப்பா இறந்துவிட்டார் என்று கூறிய கில்கிறிஸ்ட் , அவருக்கு அனுதாபம் தெரிவித்தார் . முகமது சிராஜ் அப்பா இறந்ததற்கு சைனியின் அப்பா இறந்து விட்டதாக கில்கிறிஸ்ட் நினைத்து இருக்கிறார்.

மோசம்

மோசம்

இதனால் சைனி ஓவர் போட வரும் போதெல்லாம் அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கில்கிறிஸ்ட் பேசினார். உடன் இருந்த வர்ணனையாளரும் சைனியின் அப்பா இறந்துவிட்டார் என்று நினைத்து உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார். முகமது சிராஜ் அப்பா இறந்தது கூட தெரியாமல் இவர்கள் இப்படி உருக்கமாக பேசி வந்தனர்.

சர்ச்சை

சர்ச்சை

யாருக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இவர் இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர். அவர் போய் இப்படி தவறாக வர்ணனை செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது . வர்ணனைக்கு முன் அதற்கு உரிய சரியான ஹோம் ஒர்க் செய்துவிட்டு வாருங்கள் என்று கில்கிறிஸ்டுக்கு பலரும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Story first published: Friday, November 27, 2020, 12:09 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
AUSvsIND: Gilchrist and his co-commentators showing sympathy to Saini thought his father passed away.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X