For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப மோசம்!

சிட்னி: இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் தோனி இரண்டு பேருமே இல்லாத நிலையில் கேப்டன் கோலி கடுமையாக திணறி வருகிறார்.

இந்த வருடத்தின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடரான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல் ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. இந்திய பவுலர்களை பார்த்து பயப்படாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

அதிரடி

அதிரடி

இந்திய அணியில் இன்று பும்ரா, சைனி, முகமது ஷமி என்ற மூன்று ஸ்பீட் பவுலர்கள் உள்ளனர். ஆனாலும் இவர்களின் ஓவர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் பொருட்டாக கூட மதிக்கவில்லை. டேவிட் வார்னர், பின்ச் இருவருமே இந்திய பவுலர்களை கண்டு அஞ்சாமல் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார்கள்.

வார்னர்

வார்னர்

அதிலும் வார்னர் தனது ஐபிஎல் பார்மை இழக்காமல் நிலையாக ஆடினார். தொடக்கத்தில் இருந்து 90க்கும் மேல் தனது ஸ்டிரைக் ரேட்டை மெயின்டெயின் செய்து வந்தார். இன்னொரு பக்கம் பின்சும் அதிரடி காட்டினார். பும்ரா, சைனி, முகமது ஷமி என்று மூன்று தரமான வீரர்கள் இருந்தும், ஜடேஜா, சாஹல் பவுலிங் போட்டும் கூட தொடர்ந்து ரன் சென்றது.

எப்படி

எப்படி

28வது ஓவரின் கடைசி பந்து வரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இந்திய அணியால் எடுக்கவே முடியவில்லை. அதன்பின்தான் 69 ரன்கள் எடுத்த வார்னர் 27.5 ஓவரில் அவுட் ஆனார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, தோனி இருந்தவரை கோலிக்கு கேப்டன்சியில் அவர்கள் இருவரும் உதவி வந்தனர். ஆனால் இருவருமே இப்போது அணியில் இல்லை. இரண்டு வீரர்களும் இல்லாமல் கோலி கடுமையாக திணறி வருகிறார்.

திணறல்

திணறல்

தோனி ஓய்வு பெற்றுவிட்டார். ரோஹித் சர்மா காயம் மற்றும் சில உள் அரசியல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் கோலி மட்டுமே அனைத்தையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. துணை கேப்டன் கே. எல் ராகுல் பெரிய அளவில் கோலிக்கு அறிவுரை வழங்கவில்லை. இதனால் கோலி மட்டுமே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

என் இப்படி

என் இப்படி

இதன் காரணமாக இந்திய அணியின் பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப் மோசமாக இருக்கிறது. அதிலும் கோலி கொடுக்கும் ஓவர் ரொட்டேஷன் சரியில்லை. கோலி நல்ல கேப்டன்தான். ஆனால் ரோஹித் இருந்தால் கோலிக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார். அது தற்போது மிஸ்ஸாகிறது.

பெங்களூர்

பெங்களூர்

கோலியின் இந்திய அணி போல ஆட வேண்டிய டீம் தற்போது கோலியின் ஆர்சிபி போல ஆடி வருகிறது. பேட்டிங் பிட்ச், ஆஸ்திரேலிய மண் என்று சில காரணங்கள் கோலிக்கு எதிராக இருக்கிறது. உலக தரமான பவுலர்கள்

Story first published: Friday, November 27, 2020, 12:28 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
AUSvsIND: Kohli is struggling against Aussie without Rohit and Dhoni in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X