அடப்பாவமே.. அஸ்வின் ஸ்டைலில் ரன் அவுட் செய்த பாபா.. கடுப்பான ஜெகதீசன்.. டிஎன்பிஎலில் பரபரப்பு

நெல்லை: டிஎன்பிஎல் 6வது சீசனில் தொடக்க ஆட்டத்திலேயே ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. முதல் போட்டியில் சேப்பாக், நெல்லை அணிகள் மோதின.

டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்! “ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

நெல்லை அணியில் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

அஸ்வின் ஸ்டைல்

அஸ்வின் ஸ்டைல்

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. கௌசிக் காந்தி மற்றும் நாரயணன் ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அப்போது தான் இந்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. 4வது ஓவரை வீசிய பாபா அப்ரஜித் அஸ்வின் ஸ்டைலில் ஒரு சம்பவத்தை செய்தார்.

மான்காட் அவுட்

மான்காட் அவுட்

பாபா அப்ரஜித் ஓவர் வீசும் போது, பந்துவீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த நாரயணன் ஜெகதீசன் எல்லைக் கோட்டை விட்டு நகர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, மீண்டும் பந்துவீச சென்றார். மீண்டும் நாராயணன் ஜெகதீசன் அதே தவறை செய்ய, இம்முறை எவ்வித எச்சரிக்கையும் இன்றி அப்ரஜித், டக்குன்று மான்காட் முறையில் ரன் அவுட் செய்தார்.

நடுவர் கொடுத்த அவுட்

நடுவர் கொடுத்த அவுட்

இதனை மறு ஆய்வு செய்த மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, ஜெகதீசன் கடுப்பாகி பெவிலியன் நோக்கி சென்றார். பாபா அப்ரஜித் செய்த இந்த சம்பவம் மீண்டும் ஒரு பேசும் பொறாக மாறியது.தமிழக வீரர் அஸ்வின் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறையும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மான்காட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

ஐசிசி விதி என்ன?

ஐசிசி விதி என்ன?

தற்போது அஸ்வின் ஸ்டைலை பயன்படுத்தி, டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட்டிலும் வீரர்கள் ஆட்டமிழக்க செய்து வருகின்றனர். இந்த வகை அவுட்க்கு விதியில் இடமிருப்பதாக ஐசிசியே அண்மையில் அறிவித்துள்ள நிலையில், அப்ரஜித் செய்தது தவறு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Baba Aparajith Mankad Narayan Jagadeesan at non-striker end in TNPL அடப்பாவமே.. அஸ்வின் ஸ்டைலில் ரன் அவுட் செய்த பாபா.. கடுப்பான ஜெகதீசன்.. டிஎன்பிஎலில் பரபரப்பு
Story first published: Thursday, June 23, 2022, 22:44 [IST]
Other articles published on Jun 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X