பாகிஸ்தான் அணி உலக சாதனை.. பாபர் அசாம் அசத்தல் சதம்.. இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி

கராச்சி : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், 66 பந்துகளில் 110 ரன்களை விளாசினார்.

Recommended Video

PAK vs ENG 2nd T20I: Babar, Rizwan-ன் வெறித்தனமான Successful Run Chase | Aanee's Appeal

7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது,

இதில், முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மொயின் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தேவதையின் ருத்ரதாண்டவம்.. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்.. இங்கிலாந்துக்கு பதிலடி தந்த இந்தியாதேவதையின் ருத்ரதாண்டவம்.. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்.. இங்கிலாந்துக்கு பதிலடி தந்த இந்தியா

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட், அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அலெக்ஸ் ஹெல்ஸ் 26 ரன்களிலும், பில் சால்ட் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேவிட் மாலன் டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி இன்னிங்சில் தோய்வு ஏற்பட்டது.

மொயின் அலி அதிரடி

மொயின் அலி அதிரடி

அப்போது களத்திற்கு வந்த பென் டக்கட் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ஹாரி புருக்ஸ் 19 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் கேப்டன் மொயின் அலி 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம், ஆசிய கோப்பை தொடரிலிருந்து சொதப்பி வருவதால், அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் நேற்று பாபர் அசாம் அனைத்து விமர்சனங்களுக்கும் தனது பேட்டால் பதிலடி தந்துள்ளார். முதலில் பாபர் அசாம் நிதானமாக ஆட, ரிஸ்வான் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சாதனை படைத்த பாகிஸ்தான்

சாதனை படைத்த பாகிஸ்தான்

பாபர் அசாம் 31 பந்தில் தான் 38 ரன்கள் அடித்தார். அதன் பிறகு, அவர் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்ட தொடங்கினார். இங்கிலாந்து பந்துவீச்சை சிதற அடித்த அவர் 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாச,அடுத்த 30 பந்தில் 62 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 61 பந்தில் தனது 2வது சர்வதேச டி20 சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில், விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை பாபர், ரிஸ்வான் கூட்டணி படைத்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Babar Azam brilliant century and Pakistan Put record opening partnership
Story first published: Friday, September 23, 2022, 10:35 [IST]
Other articles published on Sep 23, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X