For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி மாதிரி ரெக்கார்ட் பிரேக் செய்ய 5 வருஷம் ஆகும்... அதுவரைக்கும் கம்பேர் பண்ணாதீங்க பிளீஸ்

கராச்சி : கிரிக்கெட்டில் விராட் கோலி போல பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக பாபர் அசாம் ஆவதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL நடத்த திட்டம் போடும் SOURAV GANGULY...

பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ள யூனிஸ் கான், அதுவரை அவர்கள் இருவரையும் ஒப்பு நோக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நவீன கிரிக்கெட் உலகத்தின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி என்று தெரிவித்துள்ள யூனிஸ் கான், அதுபோன்ற சாதனைகளை முறியடிக்கும் திறமை பாபர் அசாமிற்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது எப்படி இருக்கு? ஐபிஎல் நடத்த விடாமல் ஆட்டம் காட்டிய ஐசிசி.. ஷாக் கொடுத்த கங்குலி.. செம ட்விஸ்ட்!இது எப்படி இருக்கு? ஐபிஎல் நடத்த விடாமல் ஆட்டம் காட்டிய ஐசிசி.. ஷாக் கொடுத்த கங்குலி.. செம ட்விஸ்ட்!

விராட்டுடன் ஒப்புமை

விராட்டுடன் ஒப்புமை

பாகிஸ்தானின் இளம்வீரர் பாபர் அசாம் அந்த அணியின் சிறப்பான வீரராக கருதப்படுகிறார். தனது சமீபத்திய ஆட்டங்களின்மூலம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவரது பேட்டிங் ஸ்டைல் விராட் கோலியின் பேட்டிங்குடன் ஒப்புநோக்கப்படுவதால், இவர் அடுத்த விராட் கோலி என்ற பாராட்டுக்கு உரியவராகியுள்ளார்.

பேட்டிங் கோச் கோரிக்கை

பேட்டிங் கோச் கோரிக்கை

இந்நிலையில் விராட் கோலி போல பல்வேறு சாதனைகளை புரிய பாபர் அசாமிற்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அதுவரை இதுவரையும் ஒப்புநோக்க வேண்டாம் என்றும் இத்தகைய ஒப்புமைகள் தனக்கு பிடிப்பதில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் தற்போதைய பேட்டிங் கோச்சுமான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாமிற்கு திறமை உள்ளது

பாபர் அசாமிற்கு திறமை உள்ளது

விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராகவும் அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்குவதையும் சுட்டிக் காட்டியுள்ள யூனிஸ் கான், அதேபோன்ற திறமை பாபர் அசாமிற்கும் உள்ளதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் அவர் கோலியின் சாதனைகளை முறியடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

பாபரின் மனவளத்தை பராமரிக்க வேண்டும்

பாபரின் மனவளத்தை பராமரிக்க வேண்டும்

அவர்கள் இருவரையும் இன்னும் 5 ஆண்டுகள் கழித்து ஒப்புநோக்கினால் அது சரியாக இருக்கும் என்றும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். பேட்டிங் கோச்சாக, பாபர் அசாமின் மனவளத்தையும் சிறப்பாக பராமரிக்க தான் விரும்புவதாகவும் அவர் பல்வேறு உயரங்களை தொடுவதை காண விரும்புவதாகவும் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சாதனைகளையும் பாபர் அசாம் முறியடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 11, 2020, 14:06 [IST]
Other articles published on Jun 11, 2020
English summary
After four, five years if we make comparisons that would be more suitable -Younis Khan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X