For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் கேப்டனும், தற்போதைய சிறந்த பேட்ஸ்மேனும் ஆன பாபர் ஆசாம், விராட் கோலியை விட சிறந்தவர் என கூறி உள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

Recommended Video

Ganguly Changed Indian Cricket Part 3 | Ganguly made Dravid as Wicket-keeper

பாபர் ஆசாம் - விராட் கோலி இடையே ஆன ஒப்பீடுகள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், இன்சமாம் உல் ஹக் தன் பார்வையை கூறி உள்ளார். விராட் கோலியை விட, பாபர் ஆசாம் சிறந்தவர் என அதற்கான காரணத்தையும் கூறி உள்ளார்.

40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்

கோலி அறிமுகம்

கோலி அறிமுகம்

விராட் கோலி 2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். துவக்கத்தில் சராசரியாக ஆடினாலும், பின்னர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2015இல் உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக மாறினார். அவருக்கு தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து அசத்தினார்.

ஷாட் ஆடும் விதம்

ஷாட் ஆடும் விதம்

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசாம் 2015இல் அறிமுகம் ஆனார். அப்போது முதல் அவர் ஷாட் ஆடும் விதம், விராட் கோலி போலவே இருப்பதாக ஒப்பீடுகள் செய்யப்பட்டன. பாபர் ஆசாமும், கோலி போலவே தொடர்ந்து போட்டிகளில் ரன் குவித்து வந்தார்.

பாபர் ஆசாம் ரன் குவிப்பு

பாபர் ஆசாம் ரன் குவிப்பு

பாபர் ஆசாம் 26 டெஸ்ட் போட்டிகளில் 1850 ரன்களும், 74 டெஸ்ட் போட்டிகளில் 3359 ரன்களும், 38 டி20 போட்டிகளில் 1471 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

கோலியின் இளமைக் காலம்

கோலியின் இளமைக் காலம்

விராட் கோலியின் துவக்க காலத்துடன் ஒப்பிடுகையில் பாபர் ஆசாம் அவரை விட சற்றே முன்னணியில் இருக்கிறார். விராட் கோலி தன் முதல் ஐந்து ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 6000 ரன்கள் குவித்தார். அதன் ஒட்டுமொத்த சராசரி 46.38 ஆகும்.

அதிக சராசரி

அதிக சராசரி

பாபர் ஆசாம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 45.12 சராசரி வைத்துள்ளார். சராசரி அளவில் கோலியின் இளமைக் காலத்தை விட பாபர் ஆசாம் முன்னிலையில் இருக்கிறார். இதை சுட்டிக் காட்டி தான் இன்சமாம் அவரை பாராட்டி பேசி உள்ளார்.

முன்னிலையில் பாபர்

முன்னிலையில் பாபர்

"சில ஆண்டுகளிலேயே அவர் நிறைய சாதித்து விட்டார். அடுத்து வரும் ஆண்டுகளில் அவர் இதை விட சிறப்பாகவே ஆடுவார். பாபர், விராட்டின் துவக்க காலத்தை ஒப்பிட்டால், பாபர் முன்னிலையில் இருப்பதை பார்ப்பீர்கள்" எனக் கூறினார் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

ஒப்பிட வேண்டாம்

ஒப்பிட வேண்டாம்

முன்னதாக பாபர் ஆசாம் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும், பாகிஸ்தான் ஜாம்பவான்களான ஜாவேத் மியான்தத், யூனிஸ் கான், முகமது யூசுப் உள்ளிட்டோருடன் ஒப்பிடுமாறும் கேட்டுக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 3, 2020, 20:14 [IST]
Other articles published on Jul 3, 2020
English summary
Babar Azam is ahead of Virat Kohli says Inzamam Ul Haq after comparing their initial days.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X