For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸ்ட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம்

மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கருதப்படுபவர் பாபர் அசாம். ஆனால் அவருடைய மதிப்பு தெரியாமல் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.

பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறித்து அந்நாட்டு ரசிகர்கள் கேலி செய்வார்கள்.

மேலும் பாபர் அசாம் கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பாபர் அசாம் ஓரமா போங்க.. உலக சாதனையை தனதாக்கிய சுப்மன் கில்.. வெறும் 21 இன்னிங்ஸ்களில் ரெக்கார்ட்! பாபர் அசாம் ஓரமா போங்க.. உலக சாதனையை தனதாக்கிய சுப்மன் கில்.. வெறும் 21 இன்னிங்ஸ்களில் ரெக்கார்ட்!

2022ஆம் ஆண்டில் பாபர்

2022ஆம் ஆண்டில் பாபர்

சமீபத்தில் பாபர் அசாம் ஏதோ பெண்ணிடம் தவறாக பேசி விட்டதாக வீடியோவையும் அந்நாட்டு ஊடகங்கள் பரப்பின.ஆனால் இறுதியில் அது பாபர் அசாமே கிடையாது என்ற தெரியவந்தது. ஆனால் இப்படி பாபர் அசாமுக்கு பல தலைவலிகள் கொடுத்து வந்தன. தற்போது அதற்கு எல்லாம் பதிலடி தரும் விதமாக பாபர் அசாமுக்கு ஐசிசி 2 பெரிய கௌரவ விருதுகளை வழங்கி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மொத்தம் 44 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பாபர் அசாம் 2598 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்

இதில் அவருடைய சராசரி 54 ஆகும். இதில் எட்டு சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும். இதன் காரணமாக பாபர் அசாமுக்கு ஐசிசி யின் 2022 ஆம் ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் ஒன்பது போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 8 இன்னிங்ஸில் 50 ரன்கள் மேல் பாபர் அசாம் அடித்துள்ளார்.

டெஸ்டிலும் அசத்தல்

டெஸ்டிலும் அசத்தல்

இதன் காரணமாக தொடர்ந்து தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம் தற்போது ஐசிசி யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வாங்கி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பாபர் அசாம் தன்னுடைய தடத்தை பதிய வைத்திருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடி 1184 ரன்கள் அவர் விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டனாக பாபர் அசாம் விளையாடிய மூன்று தொடரையும் வென்று கொடுத்தார்.

நியாயமா?

நியாயமா?

மேலும் ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை தனது அணியை பாபர் அசாம் வழிநடத்தி சென்றிருக்கிறார். இத்தனை சாதனைகளை செய்தும் அந்நாட்டு ரசிகர்கள் பாபர் அசாமை கேப்டன் பதவி விட்டு விலகச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகும்.

Story first published: Thursday, January 26, 2023, 16:46 [IST]
Other articles published on Jan 26, 2023
English summary
Babar azam won icc cricketer of the year and odi cricketer of the year விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸ்ட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X