For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வராரு..!!செஞ்சுரி அடிக்கிறாரு..!! ரிப்பீட்டு..! இந்திய அணிக்கு செல்கிறார் சி.எஸ்.கே. வீரர்

சென்னை: ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கி ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் ருத்துராஜ் கெய்க்வாட்.

Recommended Video

Ruturaj Gaikwad scores another ton, Venkatesh stars with 112 for MP | Vijay Hazare 2021

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் விளாசி ஆரஞ்ச் நிற தொப்பியையும் வென்றவர்

3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?

இதனால் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு 6 கோடி ரூபாய் வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்கவைத்து கொண்டது.

154 ரன்கள்

154 ரன்கள்

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ருத்துராஜ் கெய்க்வாட், தொடர்ந்து 2 நாட்களில் 2 சதம் விளாசி அசத்தியுள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ருத்துராஜ், 143 பந்துகளில் 154 ரன்கள் விளாசி அசத்தினார். இதில்14 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.

2வது சதம்

2வது சதம்

இதற்கு முதல் நாள் தான் மத்திய பிரதேஷ் அணியுடன் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் 134 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் 2 போட்டியில் விளையாடி 261 ரன்கள் எடுத்துள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கடேஷ் அசத்தல்

வெங்கடேஷ் அசத்தல்

இதே போன்று ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வெங்கடேஷ் ஐயரும் விஜய் ஹசாரே கோப்பையிலும் கலக்கியுள்ளார். மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடும் அவர் 84 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். மேலும் பந்துவிச்சிலும் 55 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். இதன் மூலம் வெங்கடேஷ் ஐயரும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆர்.சி.பி. வீரர் ஹர்சல் பட்டேல் 24 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா தொடரில் தேர்வாக விஜய் ஹசாரே தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால் வீரர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடுகின்றனர். இதனால் யாரை விடுவிது யாரை சேர்ப்பது என்ற தலைவலி தேர்வுக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, December 10, 2021, 15:17 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
Back to Back centuries For Ruturaj Gaikwad in VH Trophy. In 2 Matches He scored 261 Runs as He strengthened the chance to Play in India. Venkatesh Iyer scored 84 ball 114 and Picks 3 wickets in Vijay hazare Trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X