For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ட்ரென்ட் பவுல்ட்! அது ஆப்பிள் கிடையாது.. அதை எதுக்கு வாய்கிட்ட வைச்சுகிட்டு இருக்கீங்க.. செம கலாய்!

காலே : நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய போட்டியில் ஹெல்மட்டில் பந்து சிக்கி பெரிய நகைச்சுவை நடந்துள்ளது.

நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட் பேட்டிங் செய்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதைக் கண்டு ரசிகர்கள் செமயாக கலாய்த்து வருகிறார்கள். ஐசிசியும் கோதாவில் குதித்து அதகளம் செய்தது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது.

கன்னாபின்னா பேட்டிங்

கன்னாபின்னா பேட்டிங்

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 10வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார் ட்ரென்ட் பவுல்ட். 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் விரைவாக ரன் எடுக்க வேண்டி, கன்னாபின்னா என்று பேட்டை சுற்றிக் கொண்டு இருந்தார்.

82வது ஓவர்

82வது ஓவர்

முதல் நாளின் 82வது ஓவரை லசித் எம்புள்டெனியா வீசினார். அந்த பந்தை கண்ணை மூடிக் கொண்டு ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார் ட்ரென்ட் பவுல்ட். பவுல்ட் கண்ணை திறந்து பார்த்த போது பந்தை காணவில்லை.

பந்து எங்கே?

பந்து எங்கே?

எங்கப்பா போச்சு பந்து என்று பார்த்தால், அவர் ஹெல்மட்டில் வாய்க்கு அருகே மாட்டிக் கொண்டது பந்து. அந்த காட்சியைக் கண்டு இலங்கை வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி ஆகி பின்னர் சிரித்தனர்.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

ரீப்ளேவில் பந்து பவுல்ட் பேட்டில் பட்டு டாப் எட்ஜ் ஆகி அவரது ஹெல்மட்டில் நுழைந்தது. நல்ல வேளையாக ஹெல்மட் இருந்ததால் காயம் படாமல் தப்பித்தார் ட்ரென்ட் பவுல்ட். அவர் ஹெல்மட்டில், பந்து சிக்கி இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது.

ரசிகர்கள் காமெடி

ஒருவர் ஏம்பா பவுல்ட் அது ஆப்பிள் இல்லை.. அது கிரிக்கெட் பால்.. என்று மொக்கை காமெடி அடித்துள்ளார். சிலர் அவர் பந்தை கேட்ச் பிடித்து விட்டார் என்றும் தக்காளிப் பழத்தை சாப்பிடுகிறார் என்றும் கமென்ட் போட்டு உள்ளனர்.

Story first published: Friday, August 16, 2019, 16:11 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Ball stuck into the helmet of Trent Boult during Sri Lanka - New Zealand test match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X