20 வயது ஆப்கன் கேப்டனிடம் வீழ்ந்தது வங்கதேசம்.. தோல்வி அடைவதில் எந்த அணியும் செய்யாத சாதனை!

BAN vs AFG : Afghanistan beat Bangladesh

சட்டோக்ராம் : வங்கதேசத்தை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார்.

இப்படி ஏமாத்திப்புட்டீங்களே சச்சின்..! எல்லாமே தவிடு பொடியாகிடுச்சே...! ரசிகர்கள் புலம்பல்

இளம் வயது கேப்டன்

இளம் வயது கேப்டன்

வெறும் 20 வயதே ஆன ரஷித் கான், இளம் வயது கேப்டன் என்ற சாதனை எல்லாம் நிகழ்த்தினாலும், 20 வருடமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வங்கதேச அணியை வீழ்த்துவாரா? என்ற சந்தேகம் இருந்தது.

வெற்றி பெற வைத்தார்

வெற்றி பெற வைத்தார்

ஆனால், தன் அபாரமான பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கிய அவர் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். ரஹ்மத் ஷா அடித்த சதமும் பெரிதும் உதவியது. பெரிய அணிகளுக்கே ஆட்டம் காட்டும் வங்கதேசம், இந்த முறை மிகவும் பலவீனமாக இருந்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 342 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா சதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தான் அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்கார் ஆப்கன் 92 ரன்கள், ரஷித் கான் 51 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினர்.

வங்கதேசம் படுமோசம்

வங்கதேசம் படுமோசம்

வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸில் 2௦5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக ஆட்டமிழந்தது. ரஷித் கான் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான், 260 ரன்கள் எடுத்தது.

டிரா செய்ய போராடுமா?

டிரா செய்ய போராடுமா?

வங்கதேச அணிக்கு 398 ரன்கள் என்ற மிகக் கடின இலக்கை நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான். வங்கதேசம் ஒன்றரை நாட்கள் மீதம் இருந்ததால் தோல்வி அடையுமா? அல்லது டிரா செய்ய போராடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இமாலய வெற்றி பெற்ற ஆப்கன்

இமாலய வெற்றி பெற்ற ஆப்கன்

ஆனால், ரஷித் கான் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது வங்கதேசம். 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது அந்த அணி. 224 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.

பரிதாப சாதனை

பரிதாப சாதனை

தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் அணி தன் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதே சமயம் வங்கதேச அணி 10 டெஸ்ட் போட்டிகள் ஆடும் நாடுகளிடம் தோல்வி அடைந்து பரிதாப சாதனை செய்தது. இந்த மோசமான சாதனையை செய்த ஒரே நாடு வங்கதேசம் மட்டுமே.

ரஷித் கான் கலக்கல்

ரஷித் கான் கலக்கல்

20 வயது இளம் கேப்டனான ரஷித் கான் கேப்டனாக தன் முதல் டெஸ்ட் போட்டியை வென்று காட்டி இருக்கிறார். டெஸ்ட் போட்டியை வென்ற இளம் கேப்டன் என்ற சாதனையை செய்தார் ரஷித் கான். அவர் இந்த டெஸ்டில் 11 விக்கெட்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BAN vs AFG : This is how Afghanistan beat Bangladesh in the only test match. Rashid Khan leads in front of the team.
Story first published: Monday, September 9, 2019, 19:24 [IST]
Other articles published on Sep 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X