புகழ் எல்லாம் ஒரு நொடில போச்சே.. ஸ்டம்ப் மைக்கால் சிக்கிய வங்கதேச வீரர்.. போட்டியில் வன்முறை பேச்சு!

தாக்கா: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹிம் மிக மோசமாக பேசி சிக்கிக்கொண்டுள்ளார்.

குசல் பெராரா தலைமையிலான இலங்கை அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அவர் தான் அடுத்த கேப்டன்.. பிசிசிஐ-ன் மறைமுக திட்டம்... அடித்துக் கூறும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்! அவர் தான் அடுத்த கேப்டன்.. பிசிசிஐ-ன் மறைமுக திட்டம்... அடித்துக் கூறும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்று வங்கதேச அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

2வது போட்டி

2வது போட்டி

நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஸ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக ‘டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இலங்கை பேட்டிங்

இலங்கை பேட்டிங்

இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹீம் இலங்கை பேட்ஸ்மேன் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிடி ஹாசன் வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த குணதிலகா ஒரு பந்தை மெஹிடி ஹாசனிடம் மெதுவாக தட்டிவிட்டார். அப்போது மறுமுணையில் நின்றிருந்த பதும் நிஷங்கா சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். ஆனால் பின்னர் பவுலர் அந்த பந்தை தடுத்ததை அறிந்து நின்றுவிட்டார்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

இந்த சம்பவத்தின் போது கீப்பிங் செய்துகொண்டிருந்த முஸ்பிகுர் ரஹிம், பவுலர் மெஹிடியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. இந்நிலையில் ரசிகர்கள் இது குறித்த வீடியோவை தற்போது இணையத்தில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை இருக்குமா?

நடவடிக்கை இருக்குமா?

பொதுவாக பேட்ஸ்மேனோ, பவுலரோ ரன் எடுக்கும்போது சகவீரரை கீழே வேண்டுமென்றே தள்ளிவிட்டால், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் மெஹிடி ஹாசனை, சண்டைக்கு தூண்டிவிடுவதுபோல் முஸ்பிகுர் ரஹிம் பேசியிருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை பாயும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Bangladesh Player Mushfiqur Rahim’s stump-mic comments go viral
Story first published: Thursday, May 27, 2021, 11:27 [IST]
Other articles published on May 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X