For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவிடம் சம்பவம் செய்திருக்கிறோம்.. எங்களை சாதாரணமாக நினைக்க மாட்டாங்க - கேப்டன் லிட்டன் தாஸ்

டாக்கா : இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் வங்கதேச அணியின் தற்காலிக கேப்டனாக லிட்டன் தாஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமீம் இக்பால் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியதை அடுத்து இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிட்டன் தாஸ் என்ற பெயரை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

டாக்கா ஆடுகளத்தால் இந்தியாவுக்கு வந்த ஆபத்து.. இம்முறையும் வானிலை குறுக்கிடுமா? வெற்றி இலக்கு என்ன? டாக்கா ஆடுகளத்தால் இந்தியாவுக்கு வந்த ஆபத்து.. இம்முறையும் வானிலை குறுக்கிடுமா? வெற்றி இலக்கு என்ன?

அதிரடி ஆட்டக்காரர்

அதிரடி ஆட்டக்காரர்

அதற்கு காரணம், டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனி ஆளாக நின்று 27 பந்துகளில் 60 ரன்கள் லிட்டன் தாஸ் குவித்தார். அவர் ஆட்டம் இழந்தவுடன் தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. தற்போது அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று உள்ளதால் அவர் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய அவர் முதலில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த மண்

சொந்த மண்

எனக்கு இந்த வாய்ப்பை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். கேப்டனாக செயல்படுவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.நிச்சயமாக என்னுடைய செயலை சிறப்பாக மேற்கொள்வேன்.இந்தியா நிச்சயமாக பெரிய அணி தான். ஆனால் நாங்களும் சொந்த மண்ணில் சிறந்த அணியாக விளையாடி வருகிறோம். எங்கள் அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது கொஞ்சம் பின்னடைவு தான்.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

இருந்தாலும் மற்ற திறமையான வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகள் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அவர்களுக்கு எதிராக கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். இதன் காரணமாகவே எங்கள் அணியை அவர்கள் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள்.அதுவே எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் தான். நாங்கள் நிச்சயமாக வெற்றிக்காக தான் விளையாடுவோம்.

சண்டையிடுவோம்

சண்டையிடுவோம்

இந்தியாவுக்கு எதிராக கடுமையாக சண்டையிடுவோம் எங்கள் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சரிசம பலத்துடன் இருக்கிறோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் பொருத்தவரை நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம் என்று வங்கதேசி கேப்டன் ரிட்டன் தாஸ் கூறியுள்ளார். கடந்து முறை இந்தியாவை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொண்ட போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வங்கதேசம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 3, 2022, 23:34 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Bangladesh stand in captain liton das speaks about facing indian in odi இந்தியாவிடம் சம்பவம் செய்திருக்கிறோம்.. எங்களை சாதாரணமாக நினைக்க மாட்டாங்க - கேப்டன் லிட்டன் தாஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X