For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை டி20: எமிரேட்ஸ்க்கு எதிராக 51 ரன்னில் வங்கதேசம் வெற்றி !

By Karthikeyan

மிர்பூர்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டிகள் வங்கதேசத்தில் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.

Bangladesh won aganist UAE in Asia Cup T20

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் உள்ளூர் அணியான வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது மிதுன் சிறப்பாக ஆடி 41 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

சவுமியா சர்கார் (21), சபிர் ரஹமான் (6), மிஷ்பிகுர் ரஹிம் (4), சாகிப் அல் ஹசன் (13), மகமதுல்லா (36) ரன்கள் சேர்க்க வங்கதேச அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தனர்.

அருமையான பந்து வீச்சால் வங்கதேசத்தை மிரட்டிய எமிரேட்ஸ் அணி தரப்பில் முஹம்மது நவீத், அம்ஜத் ஜாவேத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதைடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய எமிரேட்ஸ் அணிக்கு முகம்மது கலீம் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரோகன் முஸ்தபா (18), முகம்மது ஷாஜத் (12), முகம்மது உஸ்மான் (30), மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆக எமிரேட்ஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 82 ரன்னில் சுருண்டது. இதனால் வங்கதேச அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, February 27, 2016, 0:20 [IST]
Other articles published on Feb 27, 2016
English summary
Asia Cup T20: Hosts Bangladesh crush UAE for 1st win
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X